தீபக்: என் நிறுவனத்தை விற்குமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்

deepakவணிகரான தீபக் ஜெய்கிஷன், தமது முன்னாள் நிறுவனமான அஸ்தாசாங்கே -ஐ  ( Astacanggih ) 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு தற்காப்பு அமைச்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அவ்வாறு விற்குமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

அவான் மெகா சென் பெர்ஹாட்-உடன் செய்து கொண்ட நிலப் பேரத்துக்கு தாம் செலவு செய்த பணத்துக்கு மட்டுமே அந்த விற்பனை உதவியதாக தீபக் மேலும் கூறினார். அந்த நிலப் பேரம் நிறைவேறாமல் போய் விட்டது. தமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் மறுக்கப்பட்ட போதிலும் தாம் அந்த விற்பனைக்கு வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“அஸ்தாசாங்கே-யில் உள்ள எங்கள் பங்குகளை நானும் என் பங்குதாரர்களும் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றது உண்மைதான். ஆனால் அது ராஜா ரோப்பியாவுக்கான 13 மில்லியன் ரிங்கிட், அரசியல் நன்கொடைகளாக 8 மில்லியன் ரிங்கிட், நிதிச் செலவுகளாக 7 மில்லியன் ரிங்கிட், சட்ட மற்றும் இதர செலவுகளாக 2 மில்லியன் ரிங்கிட் ஆகியவை சம்பந்தப்பட்ட அடக்க விலையாகும்.”

“அந்த இறுதி எச்சரிக்கை எங்கள் மீது திணிக்கப்பட்டது,” என அவர் குறுஞ்செய்தி ஒன்றில் கூறினார்.

TAGS: