2012-இன் செய்தி நாயகர்….

1newsகடந்த பத்தாண்டுகளாக ஆண்டின் இறுதிப்பகுதியில் அவ்வவ்வாண்டின்  செய்திநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை மலேசியாகினி வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

‘யாருடைய செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றனவோ, யார் மலேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறாரோ’ அவரே செய்திநாயகர்.

மலேசியாகினி அப்படிப்பட்ட பதின்மரைப் பெயர் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை செய்திநாயகராக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வாசகர்களிடம் ஒப்படைத்தது. வாசகர்களும் ஒருவரைத் தேர்தெடுத்துள்ளனர்.

இவர் கடந்த ஆண்டே செய்திநாயகர் ஆகி இருக்க  வேண்டியவர். கடந்த ஆண்டில் கிடைத்திருக்க வேண்டிய பாராட்டு இந்த ஆண்டில் கிடைத்துள்ளது.

2012-இல் செய்திநாயகர் என்ற பெருமைக்குரியவர்… மலேசிய வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர், ஆர்ப்பாட்டங்களுக்குள் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்… பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்.

இரண்டாவது இடம் என்எப்சி விவகாரத்தை அம்பலப்படுத்திய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிக்கு. அவருக்கு அடுத்த இடத்தில் வந்தவர் ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வொங் டாக்.

வாக்களிப்பின் முழுமையான முடிவுகள் வருமாறு:

 

1ambi1. எஸ்.அம்பிகா- மூத்த வழக்குரைஞர் பெர்சே ஒருங்கிணைப்பாளர். 6,438 வாக்குகள்

 

 

2rafiz2. ரபிஸி ரம்லி- பிகேஆர் வியூக இயக்குனர். 5,480 வாக்குகள்

 

 

1wong3. வொங் டாக்-ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர். 5.433 வாக்குகள்

 

 

1dataran4. டாட்டாரான் மெர்டேகா. 5,194 வாக்குகள்

 

 

1samad5. ஏ.சமட் சயிட்- தேசிய இலக்கியவாதி, பெர்சே ஒருங்கிணைப்பாளர் 4,993 வாக்குகள்

 

 

1sharzatt6. ஷரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தார் 4,037 வாக்குகள்

 

 

1rosmah7. ரோஸ்மா மன்சூர்- பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் 3,615 வாக்குகள்

 

 

1nazri8. நஸ்ரி அப்துல் அஜீஸ்-பிரதமர்துறை அமைச்சர். 2,416 வாக்குகள்

 

 

1maha9. மகாதிர் முகம்மட்- முன்னாள் பிரதமர். 2,206 வாக்குகள்

 

 

1chua10. சுவா டீ யோங்- லாபிஸ் எம்பி, மசீச இளம் நிபுணர் விவகாரப் பிரிவுத் தலைவர். 1,676 வாக்குகள்

முந்தைய செய்திநாயகர்கள்

 

2011 -பெர்சே ஆதரவாளர்கள்

2010 -இப்ராகிம் அலி

2009 -தியோ பெங் ஹொக்

2008 -மக்கள்

2007 -வி.கே. லிங்கம்

2006 -மகாதிர் முகம்மட்

2005 -ரபிடா அஜீஸ், மகாதிர் முகம்மட்

2004 -ச,சாமிவேலு

2003 -ஹுசாம் மூசா

2002 -ஜைனுடின் மைடின்

2001 -ரயிஸ் யாத்திம்

 

 

 

 

TAGS: