மோதிரமே, மோதிரமே என்னை ஏன் நீ அழைத்திருக்கக் கூடாது?

“அந்த மர்மத்துக்கு துல்லிதமான பதிலை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொய்யர்கள். அந்த ‘மோதிரத்துக்கு’ மட்டும்தான் உண்மை தெரியும் எனத் தோன்றுகிறது.”

அந்த ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது

லூயிஸ்: மோதிரம் அதனை விற்றவருக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றால் பின் வரும் செலவுகளுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்?

1) விமானச் சரக்குக் கட்டணம். (அந்த மோதிரம் விலை உயர்ந்தது என்பதால் கட்டணம் மிக அதிகமாக இருக்க வேண்டும்)

2) காப்புறுதிக் கட்டணம். அது நிச்சயம் சில நூறு ரிங்கிட்டுக்குள் இருக்காது.

3) மோதிரத்துக்கான வைப்புத் தொகை- அதன் மொத்த மதிப்பில் குறைந்த பட்சம் 10 விழுக்காடு.

செலவுகளை கருத்தில் கொண்டால் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளது போல கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாக நிற்கும் “வாங்குகின்றவருக்கு” மோதிரத்தை அனுப்புவதற்கு விற்பவர் என்ன முட்டாளா?

அதனால் உண்மையான கோமாளி அல்லது முட்டாள் யார்? நஸ்ரியா அல்லது மோதிரத்தை விற்பவரா?

கோலியத்: அந்த மர்மத்துக்கு துல்லிதமான பதிலை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொய்யர்கள். அந்த “மோதிரத்துக்கு” மட்டும்தான் உண்மை தெரியும் எனத் தோன்றுகிறது.

அபா பாடலைப் போன்று- மோதிரமே மோதிரமே உனக்கு ஒர் அழைப்பு விடுக்கிறேன்: “ஆம் நான் நோயுற்றுள்ளேன். காய்ச்சலாக இருக்கிறது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. மோதிரமே மோதிரமே என்னை ஏன் நீ அழைத்திருக்கக் கூடாது?”

ஜெடி-யார்: அந்த மோதிரத்துக்கு நீங்கள் எப்படிப் பணம் கொடுப்பீர்கள்? மலேசியாவிலிருந்து டிடி என்ற telegraphic transfer மூலம் பணத்தை அனுப்பப் போகின்றீர்களா? ஆனல் அப்படிச் செய்தால் பாங்க் நெகாராவுக்குத் தெரிந்து விடும். ஆவணங்களும் இருக்கும்.

அல்லது நீங்கள் வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளீர்களா? நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட்டில் அது ஒரு பகுதியா?

எல்லா எம்பி-க்களும் பிரதமர்,  அவரது மனைவி உட்பட தங்கள் சொத்துக்களை அறிவிப்பது அவசியமாகும். இது போன்ற மோதிரத்தை கொள்முதல் செய்வது பற்றிப் பரிசீலிப்பதற்கு இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?

அம்னோ அரசியல்வாதிகள்  பணமும் ஆடம்பரமான சொத்துக்களும் வெளிநாடுகளில் வைத்துள்ளதாக கூறும் வதந்திகள் உண்மையாகவும் இருக்கலாம். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும்  பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இல்லையா என்பதையும் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

அனாக் சபா1: முன்னைய பிரதமர்களுடைய துணைவியர் இது போன்ற சர்ச்சைகளில் சம்பந்தப்பட்டதே இல்லை. தம்மைக் காட்டிலும் பெரிதாக காட்டிக் கொள்ளும் மனைவியின் நிழலால்  பிரதமர் விரக்தி அடைந்திருக்க வேண்டும்.

கவனமாக இல்லாவிட்டால் அந்த நிழல், அவருடைய கணவருக்கு அரசியல் ரீதியில் பாதிப்பைத் தந்து விடலாம்.

TAGS: