வழக்குரைஞர் மன்றம் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

Balaஅதனைச் செய்வதற்கான அதிகாரமும் ஆற்றலும் வழக்குரைஞர் மன்றத்திடம் உள்ளது. ஆனால் அது அந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமா ?”

பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தின் மூலம் நன்மையடைவது ஒரே ஒருவர் மட்டுமே

பெர்ட் தான்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞர் அமெரிக் சித்து ஒரே கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளார்: “யார் அந்த இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தயாரித்தது ?”

பிரபலமான வழக்குரைஞர் ஒருவரும் அவருடைய புதல்வரும் அதனை வரைந்திருக்கலாம் என பரவலாகப்  பேசப்பட்டது. ஏன் பகிரங்கமாகக் கூட வெளியிடப்பட்டது.

ஆகவே அவர்கள் சுட்டிக் காட்டப்படுவதை ஊரறியும். ஆனால் அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க ஏன் இன்னும் வெளியே வரவில்லை.

அவர்கள் நிரபராதிகள் என்றால் ஏன் இந்த ஆழ்ந்த மௌனம் ? மௌனமாக இருப்பதால் கால ஒட்டத்தில் அந்தப் பிரச்னை மறக்கப்பட்டு விடும் என அவர்கள் எண்ணுகின்றனரா ?

முகமூடி: வழக்குரைஞர் மன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தயாரித்த வழக்குரைஞரை அது அடையாளம் காண்பதற்கு எவ்வளவு காலம் தேவை ?

அவர்கள் அந்த வழக்குரைஞரை அடையாளம் காணா விட்டால் இரண்டாவது சத்தியப் பிரமாணம்  செல்லுபடியாகாது. சரி தானே ? ஆகவே அதிகாரிகள் முதலாவது சத்தியப் பிரமாணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிம் குவேக்:  அமெரிக் உண்மைகளுடன் தெளிவாக விளக்கியிருப்பது, அல்தான்துயா கொலையைச் சுற்றியுள்ள பிரச்னைகளுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது சந்தேகத்துக்கு இடமின்றி பழி போடும் பாதிப்பைக் கொண்டுள்ளது.

போலீஸ், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புக்களிடம் தான் பிரச்னையே உள்ளது. நஜிப்புக்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதற்கு அவை மறுத்து வருகின்றன. அவ்வாறே தொடர்ந்து மறுத்து வரும்.

ஆகவே நமது ஒரே நம்பிக்கை வழக்குரைஞர் மன்றம் தான். மோசடியான இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்த வழக்குரைஞர் மீதான விசாரணையை தொடங்குவதின் மூலம் அந்த மன்றம் நீதியை நிலை நிறுத்துவதற்குப் பங்காற்ற முடியும்.

அதனைச் செய்வதற்கான அதிகாரமும் ஆற்றலும் வழக்குரைஞர் மன்றத்திடம் உள்ளது. ஆனால் அது அந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமா ?

பாலாவின் வழக்குரைஞர் அமெரிக் சட்டத்துறைக்கு சிறந்த சேவை ஆற்றியுள்ளார். அது குறித்து எல்லா மலேசியர்களும் பெருமை கொள்ளலாம். மிக்க நன்றி அமெரிக், நீங்கள் நீதியை நிலை நிறுத்த முயன்றுள்ளீர்கள்.

இறைவானாக வேண்டாம்: நஜிப்பை ஒரு சாட்சியாக அழைக்காமல் இருப்பதற்கு அரசாங்க வழக்குரைஞரும்  போலீசாரும் ஏன் நீதித் துறையும் கூட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதை நான் வெறுப்புடன் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நஜிப் முதல் சாட்சியாக இல்லாவிட்டாலும் முக்கியமான சாட்சியாக இருந்திருக்க வேண்டும் என என் உள் மனது சொல்கிறது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவருக்குத் தான் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். வேறு யாருக்கும் அல்ல.

அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் ( அவர்கள் நஜிப்பின் மெய்க்காவலர்கள்) அல்தான்துயாவைச் சந்தித்ததும்  இல்லை, தெரிந்தவர்களும் இல்லை. அந்த இருவருக்கும் யாரோ ஒருவர் ஆணையிட்டிருக்க வேண்டும். அதனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமமா ?

அல்தான்துயாவைக் கொல்லுமாறு அவர்களுக்கு ஆணையிட்டது யார் என அதிகார வர்க்கத்தினர் அந்த இருவரையும் விசாரிக்கவில்லையா ?

SiPekTuLan-BN-Liao: வழக்குரைஞர் மன்றம் விழித்துக் கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய  நேரம் வந்து விட்டது. மாற்றத்துக்கான அலைகள் வீசுகின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கடமை.

 

TAGS: