டிஏபி, காங்னாம் ஸ்டைல் ‘உபா’ வீடியோவை வெளியிட்டது

1dapபன்மொழியில் அமைந்த டிஏபி-இன்  ‘உபா-ராக்கெட் ஸ்டைல்’ வீடியோ, நேற்றிரவு கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் கோலாகலமாக வெளியீடு கண்டது.

அந்த வெளியீட்டு விழாவில் பலரது கவனத்தையும் கவர்ந்தவர், மலேசியாவின் ‘முதல் பெண்மணி’ பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர்போல் காட்சியளித்த ‘டத்தின் பி’.

1dap1ரோஸ்மாவை நினைவுறுத்தும் வகையில் டாம்பீகமான உடைகள், விலைமதிப்புள்ள கைப்பை சகிதமாக வலம் வந்த டத்தின் பி, அவரைப்போல் ஒரு காட்சியிலும் நடித்துக் காட்டினார்.

நான்கு நிமிட உபா வீடியோவில் முக்கிய பங்கேற்றிருப்பவர் டத்தின் பி.

1dap2தென் கொரிய ரேப் பாடகர் Psy பிரபலப்படுத்திய காங்னாம் ஸ்டைலில் ஒரு காணொளியைத் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை  முன்வைத்தவர்  கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.கடந்த செப்டம்பர் மாதம் அவர் அவ்வாறு கூறினார்.

அதன்பின் வீடியோ தயாரிக்கும் வேலைகள் தொடங்கின. ஆனால், அதற்குப் பல இடையூறுகள். லிட்ரேக் நெடுஞ்சாலையில், எல்ஆர்டி நிலையங்களில், விற்பனை மையங்கள் முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் குறுக்கிட்டுத் தடுத்தார்கள் என வீடியோ தயாரிக்குப் பொறுப்பேற்றிருந்த டோனி புவா கூறினார்.

1dap3இந்த வீடியோ, கட்சியின் பரப்புரையின் ஒரு பகுதி என்பதால் டிஏபி ஆதரவாளர்கள் இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். .

“முகநூல் யு டியூப், டிவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்களிலும் இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்”, என்றவர் சொன்னார்.

இந்த வெளியீட்டு விழாவில் பெர்சே இணைத் தலைவர் ஏ.சமட் சைடும் கலந்துகொண்டார்.

TAGS: