கெரக்கான்: ஒரே மலேசியா சலுகை கார்டு உண்மையில் பயனுள்ளதா ?

1 card210 மில்லியன் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒரே மலேசியா சலுகை கார்டின் நிர்வாக நடைமுறைகள், பயன்கள் குறித்து கெரக்கான் கேள்வி எழுப்பியுள்ளது.

“வாழ்க்கைச் செலவுகள் கூடியுள்ளதால் சாதாரண மலேசியர்கள் எதிர்நோக்கும் சுமையை அரசாங்கம் முழுமையாக உணர்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். அந்த கார்டு அவர்களுடைய சுமையைக் குறைக்கும் என நான் நம்புகிறேன்,” என கெரக்கான் இளைஞர் துணைத் தலைவர் ஒ தொங் கியோங் கூறினார்.

என்றாலும் அந்தக் கார்டுகளின் விநியோகம் மீது அவர் முக்கியமான கேள்வியை  தமது அறிக்கையில் எழுப்பியுள்ளார். அந்தக் கார்டுகளைப் பெறுவதற்கான தகுதிகள், அவை வழங்கப்படும் நடைமுறைகள் என்ன என்று அவர் வினவினார்.

“அந்தக் கார்டுகளின் விநியோகம் உண்மையில் மலேசியர்களுக்குப் பயனுடையதாக இருக்குமா என்பது இன்னொரு பிரச்னை ஆகும்.”1 card1

“அரசாங்கம் ஒரே மலேசியா மாணவர் கழிவு கார்டுகளை விநியோகம் செய்த முந்திய அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது அந்தத் திட்டத்தில் பங்கேற்ற பல கடைகள், பெரிய விற்பனையாளர்கள் அல்ல. அத்துடன்  அவை புறநகப் பகுதிகளில் அமைந்திருந்தன.”

“நாங்கள் ஏற்கனவே அந்தப் பிரச்னை பற்றி தெரிவித்துள்ளோம்,” என்றார் ஒ.

அதற்கு மாறாக அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த சில்லறை வணிகர்களுக்குக் கற்றுக் கொடுப்பதின் மூலமும் பயனீட்டாளர் செலவுகளை அதிகரிப்பதற்கு ஊக்கமூட்டுவதின் மூலமும் சலுகைகளை கொடுக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

1 cardகடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரே மலேசியா சலுகைக் கார்டை அறிமுகம் செய்து வைத்தார். அதன் முதல் கட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் அது விநியோகம் செய்யப்பட்டது.

இரண்டாவது கட்டத்தில் “அரசாங்க தாதியர்களும் 1.4 மில்லியன் அரசு ஊழியர்களும் அந்தக் கார்டுகளைப் பெறுவர்” என்றும் அந்தக் கார்டு தொடர்பான இணையத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டத்தின் கீழ் “எல்லா மலேசியர்களும் இணையத்தின் வழி பொருட்களை வாங்குவதற்கு ஒரே மலேசியா சலுகைக் கார்டைப் பயன்படுத்தலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இரண்டாவது மூன்றாவது கட்டங்களுக்கான கால வரம்பு தெரிவிக்கப்படவில்லை.

10 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு அந்தக் கார்டுகள் வழங்கப்படும் என தகவல், தொடர்பு,  பண்பாட்டு துணை அமைச்சர் மாக்லின் டென்னிஸ் டி குருஸ் அறிவித்துள்ளதாக பெர்னாமா வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தக் கார்டுகள் மூலம் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள வணிகர்களிடமிருந்து 10 முதல் 50 விழுக்காடு வரையில் கழிவுகளைப் பெற முடியும் என அவர் சொன்னார்.

தங்கள் பொருட்களுக்கு கழிவுகளை வழங்க 4,500க்கும் மேற்பட்ட  வணிகர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் மாக்லின் டென்னிஸ் தெரிவித்தார்.

 

TAGS: