“அந்த அம்னோபுத்ராக்களும் அவர்களுடைய சேவகர்களும் ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் நிலத்தை மாற்றிக் கொள்வதின் மூலம் எளிதாக மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிக்கின்றனர்.”
“நஜிப் தற்காப்பு மய்ய குத்தகையை வழங்குவதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்”
பெர்ட் தான்: அந்த சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லா உப்புச் சப்பற்ற வணிகர். ஆனால் அம்னோ தரத்தில் அவர் தலையாய இடத்தை வகிக்கிறார். வர்த்தக வட்டாரங்களில் தம்மை விட அனுபவம் வாய்ந்த பல ஆண்களையும் மிஞ்சி விட்டார்.
அவரால் பாதிக்கப்பட்டவர்கள்- AstaCanggih Sdn Bhdன் தீபக் ஜெய்கிஷன், GuppyUnip Sdn Bhd, இறுதியாக Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT), பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட். இதில் LTAT பாதிக்கப்பட்டவர் என்பதை விட கூட்டுச் சதிகாரர் என்பதே உண்மையாகும். அதில் பாதிக்கப்பட்டவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களே.
பிஎன் சிலாங்கூரை இழந்த போதுதான் பெரும்பாலும் பிரச்னை உருவாகி இருக்க வேண்டும். Puspahanas என்ற தேசிய தற்காப்புக் கல்வி மய்யத்தைக் கட்டுவதற்கு பணம் செலுத்துவதற்கு ஈடாக அந்த நிலம் Awan Megah-விடமிருந்து GuppyUnip-க்கு மாற்றி விடப்படுவதை புதிய பக்காத்தான் அரசாங்கம் அங்கீகரித்திருக்காது. அது ராஜா ரோப்பியாவுக்குப் பிரச்னையை ஏற்படுத்தி விட்டது.
2008ம் ஆண்டு சிலாங்கூரில் பக்காத்தான் வெற்றி அடைந்ததும் அந்த மாநிலத்தில் பிஎன் -உடன் தொடர்பு வைத்திருந்த பல வணிகர்கள் சிரமங்களை எதிர்நோக்கியதாக வணிகரான என் அண்டை வீட்டுக்காரர் சொன்னார். காரணம் வாக்குறுதி கொடுக்கப்பட்ட குத்தகைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
ஒஎம்ஜி: ஒரு குத்தகை மூலம் மாநில அம்னோ மகளிர் தலைவி 130 மில்லியன் ரிங்கிட் சம்பாதிக்க முடியும் என்றால் மேல் நிலையில் உள்ளவர்கள் அன்றாடம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். கள்ளப்பண வெளியேற்றத்தில் சீனாவுக்கு அடுத்த நிலையில் நம் நாடு இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
ஒடின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றால் இன்னேரம் குற்றம் சாட்டியவர்களை நஜிப் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார் அல்லது குறைந்த பட்சம் அவற்றை பகிரங்கமாக மறுத்தாவது இருப்பார்.
ஆனால் அவர் ஆழ்ந்த மௌனம் காக்கிறார். அவரது மௌனம் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருப்பதையே காட்டுகின்றது. நஜிப் நிலையில் கொள்கைப் பிடிப்பும் நாகரீகமும் ஒருவர் இருந்தால் அவர் இன்னேரம் ஒதுங்கியிருப்பார்.
Apa Ini?: ஊழல் அளவு- அப்பட்டமான அலி பாபா பாணியில்- உண்மையில் வெட்கமே இல்லாதவர்கள். அவர்கள் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா ? மலேசியாவில் சட்ட அமைப்புக்கள் பல ஆண்டுகளாக தரம் குறைந்து விட்டது காரணமா ? நீதிமன்றங்கள் நீதியை வழங்குவதில்லை. அதிக விலை கொடுப்பவருக்கு வழக்குரைஞர்கள் தங்கள் ஆன்மாவை விற்று விடுகின்றனர். வெட்கமே இல்லை. ஆமாம் வெட்கம் என்றால் என்ன ?
அடையாளம் இல்லாதவன் #24936590: எல்லா அம்னோ வேட்பாளர்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தூய்மையானவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்லியிருக்கிறார் !
கொக்கோமோமோ: இது போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் நாளேடுகளில் வெளி வருவதே இல்லை. இந்த நாட்டை ஆளுகின்றவர்களை முடிவு செய்யும் பெரும்பாலான வாக்காளர்களுக்கு அந்த ஊழல்கள் பற்றித் தெரியாது. அவர்கள் தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கே வாக்களிப்பர்.
காலித்: புக்கிட் ராஜா நிலத்தில் எந்த மேம்பாடும் அனுமதிக்கப்பட மாட்டாது
அடையாளம் இல்லாதவன்l#75854042: மாநில அரசாங்கம் கூட்டரசு நில ஆணையத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கியது. குறிப்பிடப்பட்ட நோக்கத்துக்கு அது பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது அதன் பொறுப்பாகும்.
ஒரு திட்டத்துக்கு பணம் செலுத்துவது என்ற போர்வையில் எப்படி அரசாங்க நிலங்கள் தனியார் துறைக்கு சொந்தமாக மாற்றி விடப்பட முடியும் ?
தேசிய தற்காப்புக் கல்வி மய்யத்தையும் இராணுவ முகாம்களையும் அமைப்பதற்கு பணம் இல்லாவிட்டால் அந்த 223 ஏக்கர் நிலம் மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
பால் வாரென்: ரோப்பியாவைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. அந்த நிலம் அவருக்குச் சொந்தமானது அல்ல.
ஸ்விபெண்டர்: சிலாங்கூர் இன்னும் அம்னோ-வின் கீழ் இருந்தால் என்ன நடந்திருக்கும் கற்பனை செய்து பாருங்கள். பொது மக்களுக்கு தெரியாமலேயே அந்தப் பேரம் முடிந்திருக்கும். அந்த அம்னோபுத்ராக்களும் அவர்களுடைய சேவகர்களும் ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் நிலத்தை மாற்றிக் கொள்வதின் மூலம் எளிதாக மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிக்கின்றனர்.
கொதிக்கும் மண்: அம்னோவுக்கு எச்சரிக்கை. மந்திரி புசார் அவர்களுக்கு நன்றி.