“இசி-யில் தமது பணிகள் பற்றி வான் அகமட்-டுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் நியாயமாக நடந்து கொள்வதோடு நியாயமானவராவும் தென்பட வேண்டும். அவர் ஏன் டிஏபி கட்சித் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும் ?”
அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருங்கள் என டிஏபி இசி-யிடம் சொல்கிறது
குழப்பம் இல்லாதவன்: தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்அறிவுப்பூர்வமாக எதனையும் சொல்லத் தெரியாத வெற்றுக் குடமாகும். அதனால் அவர் தமது ஒட்டை வாயை இறுக்க மூடிக் கொள்ள வேண்டும்.
பாரபட்சம் காட்டக் கூடாத தேர்தல் ஆணையத்தில் அவர் உயர் நிலை அதிகாரி ஆவார். அவரது கருத்துக்கள் அந்த ஆணையத்தில் அவர் ஆற்றும் பங்கை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
அவர் தமது பதவியிலிருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் அல்லது உண்மையான நிறத்தை காட்டியதற்காக நீக்கப்பட வேண்டும் என்பதற்கு இதை விட தெளிவான அறிகுறிகள் ஏதுமில்லை.
ஒஎம்ஜி!!: டிஏபி தவறு குறித்து பொது மக்கள் விமர்சனம் செய்யலாம். குறையும் கூறலாம். ஆனால் அதுகுறித்து இசி கருத்துச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அவசியமும் இல்லை. அந்தத் தவறு இசி-யை எந்த வகையில் பாதிக்கப் போகிறது ?
எதிர்க்கட்சிகள் மீது அவர் உமிழ்ந்துள்ள வெறுப்பு அந்தப் பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்பதை காட்டியுள்ளது. இசி-யின் சுதந்திரத்தை கட்டிக் காப்பதற்கு அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சிவில் சமூகம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
லாவ் கோக் கோக்: இசி-யின் அறிக்கையை நான் வெறுக்கிறேன். என்றாலும் டிஏபி தேர்தல்கள் நடத்தப்பட்ட முறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. திறமை, பொறுப்பு, வெளிப்படை என டிஏபி கூறிக் கொள்ளா விட்டால் அந்தத் தவறை மன்னிக்கலாம்.
டிஏபி எல்லா நேரத்திலும் இசி-யையும் பிஎன் -னையும் குறை கூறி வந்துள்ளது. ஆகவே டிஏபி தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது.
ஒங்: லாவ் கோக் கோக் அவர்களே, டிஏபி தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது எனநீங்கள் சொல்ல வருகின்றீர்களா ? டிஏபி தனது தவறை பகிரங்கமாக அறிவித்து, அதை ஒப்புக் கொண்டது உங்களுக்கு இன்னும் தெரியாதா ?
நீலகிரி: டிஏபி அண்மைய கட்சித் தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதாக சிலர் வெகு வேகமாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் பல காலமாக தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்து வருகின்றனர். மற்றவர்களும் தங்களைப் போன்றவர்களே என அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணம் ஆகும்.
முஷிரோ: இசி-யில் தமது பணிகள் பற்றி வான் அகமட்-டுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் நியாயமாக நடந்து கொள்வதோடு நியாயமானவராவும் தென்பட வேண்டும். அவர் ஏன் டிஏபி கட்சித் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும் ?
வான் அகமட் அம்னோ பற்றி எப்போதாவது எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாரா ? பக்காத்தான் ராக்யாட் மீது வான் அகமட் நல்ல கருத்துக்களை இது வரை சொல்லியிருக்கிறாரா ?
அனாக் ஜேபி: அரசியல்வாதியாக மாற விரும்பினால் வான் அகமட் ஒர் அரசியல் கட்சியில் இணைய வேண்டும். அவரது கருத்துக்கள் பாரபட்சமானவை, தொழில் தர்மத்துக்கு எதிரானவை.
அவர் தமது பணியை மறந்து விட்டதாக நான் எண்ணுகிறேன். அவர் அரசியல் சார்பற்றவராக இருப்பதோடு நியாயமானவராகவும் இருக்க வேண்டும். நியாயமானவராகவும் தெரிய வேண்டும்.