செவ்வாய் கிரகத்தில் பூ பூத்ததா?

marsவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது. அது மலரும் ஒரு பூவாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.