சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாலிமா யாக்கோப் (வயது 58), அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர், நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த மைக்கேல் பால்மர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் காரணமாக, கடந்த மாதம் பதவி விலகினார்.
தற்போது சபாநாயகர் பதவி காலியாக இருப்பதால், அமைச்சராக இருக்கும் ஹாலிமா யாக்கோபை, புதிய சபாநாயகராக பிரதமர் லீ சீன் அறிவித்துள்ளார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியின் எம்.பி.,யான ஹாலிமாவுக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர். 2001ல், இவர் அரசியலில் நுழைந்தார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு கணிசமான பெருபான்மை இருப்பதால், ஹாலிமா போட்டியின்றி வரும், 14ம்தேதி சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார்.