“மற்றவர்களுடைய தண்ணீர் தேவைகளை நீங்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் மக்களுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டும்”
சபாஷ்-க்கு வழங்கப்பட்ட சலுகையை மீட்டுக் கொள்ள சிலாங்கூர் முயலுகிறது
தோலு: கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் இப்போது நிலவுகின்ற தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலாங்கூரை ஆட்சி புரியும் பக்காத்தான் ராக்யாட் மீது கோபம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பிஎன் -னும் சபாஷும் செய்த தில்லுமுல்லு வேலை தான் தண்ணீர் பிரச்னைக்குக் காரணம். வேறு ஏதுமில்லை.
வளமான செல்வம் மிகுந்த சிலாங்கூர் மாநிலத்தை பிஎன் அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதற்காக அதனைக் கைப்பற்றுவதற்கு பிஎன் எல்லா முயற்சிகளையும் செய்கின்றது. நல்லது பிஎன், உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன். என்னுடைய குடும்ப பயனீட்டுக்காக நான் தண்ணீரை வாளிகளில் நான்காவது மாடியில் உள்ள என் வீட்டுக்கு கொண்டு சென்றாலும் நான் பக்காத்தானுக்குத் தான் வாக்களிப்பேன்.
முன்னாள் பேராக்கியன்: சபாஷ் பராமரிப்பு வேலைகளை முறையாகச் செய்யாது தான் ‘தண்ணீர் பிரச்னைக்கு’ காரணம் என நான் பேசிய ஐவரில் நால்வர் கருதுகின்றனர்.
பெட்சன்01: ஆம் அது தான் சரியான வழி. சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அவர்களே நான்உங்கள் முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன்.
சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே நீர் விநியோகத்தில் குளறுபடி செய்கின்றவர்களும் குடி மக்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களைத் தந்துள்ளவர்களும் அவர்களது குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும்.
மூத்த குடிமகன்: சிலாங்கூர் மாநில நீர் வளங்களை நிர்வாகம் செய்யும் சபாஷ் நிறுவனத்தை மந்திரி புசார் விரட்டுவது முக்கியமாகும்.
தண்ணீர் மிக அவசியமான அடிப்படைத் தேவை ஆகும். நமது அடிப்படைத் தேவைகளில் குழப்பத்தை ஏற்படுத்த நாம் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
நீர் விநியோகம் மீது அரசியல் விளையாட்டு விளையாட யாரையும் அனுமதிக்கக் கூடாது.
வழிப்போக்கன்: அண்மைய தண்ணீர் நெருக்கடிக்கு சபாஷ் சதியே காரணம் என்பதை அறிந்து கொள்ள ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
காலித் தம்மைப் போல முட்டாள் என சபாஷ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸாலி இஸ்மாயில் எண்ணுகிறாரா ? திறமையே இல்லாத அவருக்கு எப்படி மாதம் ஒன்றுக்கு 200,000 ரிங்கிட் சம்பளம் கொடுக்கப்படுகிறது ?
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தைக் கறப்பதற்காகவே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இந்தோனிசியாவில் உள்ள அவரது நிறுவனத்திடமிருந்து குழாய்களை சபாஷ் வாங்குகின்றது. தாய்லெக்: சபாஷ் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் பெறுகிறார். ஆனால் இந்தத் தண்ணீர் பிரச்னையை அவரால் தீர்க்க முடியவில்லை.
நீர் விநீயோகம் தனியார் மயமாக்கப்பட்டு சபாஷ்-டம் ஒப்படைக்கப்பட்ட போது அளித்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றவில்லை. காரணம் சிலாங்கூரில் நீர் விநியோகத்தில் அதற்கு ஏகபோக உரிமை இருப்பதாகும்.
விஷயம் தெரிந்தவன்: அன்புள்ள கூட்டரசு அரசாங்கமே, மக்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்களுடைய தண்ணீர் தேவைகளை நீங்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் மக்களுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டும்.
மலேசியாகினி வாசகர்: மந்திரி புசார் காலித் நல்ல முறையில் முடிவு செய்யக் கூடியவர், நியாயமானவர்,காய்களை நகர்த்தும் முன்னர் சிந்திப்பவர் என்பதையே இது காட்டுகின்றது. விரைவில் சபாஷ் வரலாறு ஆகிவிடும்.