சபாஷ் நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுவதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

waterநீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது நடவடிக்கைகளை உடனடியாக சிலாங்கூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு பிகேஆர் நாளை கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தைத் தொடங்குகின்றது.

“சபாஷ் கௌரவமாக பின்வாங்குவதற்கு நெருக்குதல் தொடுக்கும் பொருட்டு தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரு மில்லியன் பயனீட்டாளர்களிடமிருந்து கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை தொடங்குவோம்,” என பிகேஆர் பயனீட்டாளர் பிரிவுத் தலைவர் யாஹ்யா ஸாஹ்ரி இன்று நிருபர்களிடம் கூறினார்.

சபாஷ் போதுமான அளவுக்குத் திறமையாக இயங்கத் தவறி விட்டது. வாங்சா மாஜுவிலும் பாண்டானிலும் அண்மையில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடைகள் போன்ற பல கோளாறுகள் நிகழ்ந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

கையெழுத்துக்கள் திரட்டப்பட்ட பின்னர் அவை சபாஷிடம் ஒப்படைக்கப்படும்.

 

TAGS: