“அது மக்கள் பணம். பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அம்னோ/பிஎன் பணம் அல்ல அது. உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்”
100 ரிங்கிட் அன்பளிப்பில் பிஎன் தலைவர்களைச் சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை
அடையாளம் இல்லாதவன்#19098644: விரக்தி அடைந்த ஒரு கட்சி இந்த நாட்டில் சட்டமியற்றும் அமைப்புக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி வருகின்றது.
வேறு எந்த நாட்டிலும் அது ஊழலாகவும் அதிகார அத்துமீறலாகவும் கருதப்படும். அடுத்த தேர்தலில் அம்னோ தலைமையில் இயங்கும் கும்பலை மக்கள் தோற்கடிக்க வேண்டும் எனக் கூறுவதற்கு அது தான் முக்கியக் காரணம்.
கெங்: இது புதிதல்ல. பினாங்கில் முன்னாள் கெரக்கான் சட்ட மன்ற உறுப்பினர் பெற்றோர்களுக்கு அந்த ரொக்க உதவித் தொகையை வழங்கினார். அவர் இரண்டு மணி நேரம் உரையாற்றிய பின்னரே பெற்றோர்கள் மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட்ட 100 ரிங்கிட்டை பெற்றுக் கொண்டார்கள்.
குவிக்னோபாண்ட்: பிஎன் பணத்தை விநியோகம் செய்வது சரி தான். ஆனால் அதே வேளையில் அது மக்கள் வரிப்பணம் என்பதை மாணவர்கள் அறிந்து கொண்டு வரி செலுத்துவோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அம்னோ/பிஎன் -னுக்கு அல்ல. தேர்தல் என வரும் போது பெற்றோர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிக்க வேண்டும்.
குழப்பம் இல்லாதவன்: திவாலாகி விட்ட பிஎன் ஆட்சி தரும் கவைக்கு உதவாத பரிதாபகரமான காரணம் அது. அரசியலில் மாணவர்களை சம்பந்தப்படுத்துவது சட்ட விரோதம் என நான் எண்ணியிருந்தேன்.
பேரணிகள் பங்கு கொள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இரட்டை வேடம் போடும் அரசாங்கத்தின் விரக்தியையே அது காட்டுகிறது.
அத்தகைய நிகழ்வுகள் மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அந்த பிஎன் கோமாளிகளுக்கு ஏன் புரியவில்லை ?
அடையாளம் இல்லாதவன்_40dc: அது மக்கள் பணம். பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அம்னோ/பிஎன் பணம் அல்ல அது. உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்
பொய்யர்களை வேரறுப்பவன்: அந்தப் பணம் ஏற்கனவே திவாலாகி விட்ட தேசியக் கருவூலத்திலிருந்து வந்ததாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறை 250 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 500 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்து விட்டது.
அடையாளம் இல்லாதவன்_3ec6: மக்கள் வரிப்பணத்தில் தேடும் மலிவான விளம்பரம் இதுவாகும்.
புன்னகை: பக்காத்தான் பினாங்கு அரசாங்கம் முதியவர்களுக்கு 100 ரிங்கிட் கொடுத்த போது அம்னோ ‘லஞ்சம்’ எனக் கூச்சல் போட்டது. பிஎன் ஏன் இப்போது அதனைச் செய்கின்றது ? அது செய்தால் சரியா ?