தை பிறந்து விட்டது; வழி பிறக்க விவேகம் தேவை!, சேவியர்

நாட்டில் தைப் பொங்கல் புத்தாண்டை  கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய தைப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது, வழி பிறக்கxavier வேண்டும். அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை!
 
உழைக்கும் மக்களுக்கு மட்டுமின்றி உழைப்புக்குத் துணை நிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உபகரணங்களுக்கும்  மரியாதை அளிப்பதே பொங்கலின் சிறப்பு. அவ்வகையில் மாநிலத்தின் வளம் மக்களுக்கே என்ற ‘’மைஸ்’’ திட்டத்தின் வழி சிலாங்கூரில் 60 கோடி ரிங்கிட்டுக்கு மேல் மக்கள்  நலன் திட்டங்களுக்குப் பயன் படுத்துப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களுடன் நாட்டின் வளத்தைப் பகிர்ந்து கொண்டால் எந்த நாடும் திவாலாகாது. மாறாக மாநிலத்தின் வளம் பெருகி, மக்களுக்கு அதிக நன்மை கிட்டியுள்ளதைக் காட்டும் நற்சான்றாக விளங்கியிருப்பது சிலாங்கூர் மாநிலத்தின் நிதி கையிருப்பு. அது 2008ம் ஆண்டில் 40 கோடி ரிங்கிட்டாக இருந்து கடந்த நான்கே ஆண்டுகளில் 250 கோடி ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. 

பக்காத்தான் முதல் முறையாகப் பல மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று இருந்தாலும் மக்கள் கூட்டணியின் நேர்மையான ஆட்சி முறை, கர்வமின்றி மக்களை மதித்து அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து வருவது மக்களைக் கவர்ந்துள்ளது. 

அதே வேளையில், எல்லாருக்கும்  இலவச உயர்க்கல்வி,  பிடிபிடிஎன்  கல்விக்கடன்  நீக்கம், மலிவான வாகனங்கள், டோல் கட்டண நீக்கம், வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள், மலிவான எரிபொருள், தாய்மொழி கல்விக்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போன்ற கொள்கைகளின் வழி ஒற்றுமையான முன்னேற்றகரமான, சுபிட்சமான மலேசியாவை உருவாக்க மலரும்  இப்புதிய ஆண்டில் அனைவரும் உறுதி எடுப்போம்.

உழைக்கும் வர்க்கம்  நீண்ட நாட்களாகக் கண்கள், கைகள் கட்டப்பட்ட மக்களாக இருப்பதிலிருந்து விடுபட்டு ஓர் ஆரோக்கியமான, கற்றறிந்த, விழிப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவோம்!

விழிப்பான சமுதாயமே வாழ்வில் வளமடையும். அதற்கு வழிகாட்டும் தை பிறந்து விட்டது; வழியை நாம் அமைப்போம், வாருங்கள்! அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்.  

 

TAGS: