“அம்னோ அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தியது, அரங்கத்துக்கு ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டு சென்றது, அத்துடன் வந்தததற்காக பணமும் கொடுத்தது- பேராசை பிடித்த ஆட்சிக்கு ஆதரவு அதனால் தான்”
சிலாங்கூர் பிஎன்: கேஎல்112ல் கலந்து கொண்டவர்கள் ‘கட்சி ஊழியர்கள்’
பெர்ட் தான்: சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் அவர்களே, பேரணியில் இந்தியர், சீனர் ஆதரவு கணிசமாக இல்லை என நீங்கள் சொல்வதில் அர்த்தமே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கிருந்த எங்களை வெறும் கட்சி ஊழியர்கள் எனச் சொல்லி எங்களை அவமானப்படுத்தி விட்டீர்கள். நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் எந்தக் கட்சியையும் சேராதவர்கள்; நாங்கள் மலேசியா என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
சீன ஆதரவாளர்கள் குறிப்பாக லைனாஸ் எதிர்ப்பு டி சட்டைகளை அணிந்திருந்தவர்கள் அங்கு இருந்ததை நாங்கள் பார்த்தோம். அடுத்த இரண்டு நாட்களில் பொங்கல் திருநாள் வருவதையும் கூடப் பொருட்படுத்தாமல் பெர்சே 2.0ல் இருந்ததைக் காட்டிலும் அதிகமானை இந்தியர்கள் அங்கு தென்பட்டனர்.
அரங்கில் மக்கள் நெருக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்ததாலும் வெயில் கொளுத்தியதாலும் வேர்வை வடிந்த போதும் அந்தப் பேரணி கலகலப்பான கூட்டமாக இருந்தது.
அது ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும். போலீசாரும் அதிகாரிகளும் தலையிடாமல் இருந்தால் மலேசியர்களாகிய நாம் பெரும் எண்ணிக்கையில் அமைதியாகக் கூட முடியும் என்னும் செய்தி தெளிவாக அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எத்தகைய சட்டப்பூர்வமான பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தடுப்பததற்கு பிஎன் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் இனிமேல் காரணங்கள் இருக்காது. பொதுப் பேரணிகளைப் பொறுத்த மட்டில் நாம் முதிர்ச்சி அடைந்து விட்டோம்.
அனைவருக்கும் நியாயம்: பிஎன் நிகழ்வுகளில் மக்கள் பங்கு கொள்வதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். இலவச பரிசுகளை, அன்பளிப்புக் கூடைகளை வழங்க வேண்டும். பக்காத்தான் யாரும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் சொந்தச் செலவில் அங்கு சென்றார்கள்.
இலவசம் ஏதுமில்லை, சொந்தச் செலவில் வர வேண்டும் எனச் சொல்லி நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு பிஎன் -னிடம் சொல்லுங்கள். யாரும் வர மாட்டார்கள்.
தயவு செய்து முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிட வேண்டாம். மக்கள் பணத்தைச் செலவு செய்து மக்களை தங்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிஎன் அழைப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.
பெண்டர்: பிஎன் ஆட்கள் தாங்கள் ஜோடித்த பெருமையில் வாழ விடுங்கள். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசுகின்றனரோ அந்த அளவுக்கு வரும் தேர்தலில் பக்காத்தானுடைய வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.
பெரும்பான்மை மக்கள் அவர்களுடைய பிரச்சாரத்தை நம்பவில்லை என்பதை சனிக்கிழமை பேரணி காட்டி விட்டது.
அடையாளம் இல்லாதவன்#49297474: அம்னோவைச் சேர்ந்த தலைக்கனம் பிடித்த மனிதர்கள் அவர்கள். அதிகாரத்தில் உள்ள மக்கள் தங்களை முட்டாளாக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக மோசமடைகின்றன.
என்ன நடக்கிறது: ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும் ! ‘அம்னோ அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தியது, அரங்கத்துக்கு ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டு சென்றது, அத்துடன் வந்தததற்காக பணமும் கொடுத்தது- பேராசை பிடித்த ஆட்சிக்கு ஆதரவு அதனால் தான்.
மாற்றத்தை நாடி நடத்தப்பட்ட கேஎல் 112, பெர்சே பேரணிகளில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையிலு ஈடாக முடியாது.
முஷிரோ: முகமட் ஜின் அவர்கள் உங்கள் விளக்கம் வேண்டுமானால் நஜிப்பையும் அம்னோவையும் நம்ப வைக்கலாம். பாஸ் கட்சி ஊழியர்கள் அன்றைய தினம் எல்ஆர்டி ரயில்களில் வந்தனர். யாரும் வாடகை பஸ்ஸில் வரவில்லை. உங்கள் கூற்று அம்னோ ஆட்களை மீண்டும் முட்டாளாக்குகிறது.
கூட்ட எண்ணிக்கை குறித்து போலீசார் மூன்றாவது முறையாகத் திருத்தம் செய்யும் போது அந்த எண்ணிக்கை மேலும் குறையும். கவலைப்பட வேண்டாம். பேரணியில் சீனர்கள் குறைவாக இருந்ததாக நீங்கள் சொல்கின்றீர்கள். அப்படி என்றால் பக்காத்தானை அதிகமான மலாய்க்காரர்கள் ஆதரிக்கின்றனர் என அர்த்தமா ?
அடையாளம் இல்லாதவன் #33877536: அதிகமான சீனர்களும் இந்தியர்களும் வராமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு புத்தகத்தை அதன் அட்டையக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டாம்.
அரசாங்க நிர்வாகத்தைப் பயன்படுத்தி சுவரொட்டிகளை நீங்கள் ஒட்டுவதற்கு இது கேடிஎம் அல்ல. சீனர்களும் இந்தியர்களும் 13வது பொதுத் தேர்தலில் உங்களுக்கு காட்டுவார்கள்.
ஜியுடைஸ்: பிஎன் ஏன் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு பிஎன் சிலாங்கூர் அளித்த பதில்இன்னொரு காரணம் ஆகும். அவர்களிடம் கௌரவம் என்பது கிஞ்சித்தும் கூடக் கிடையாது.
ஸ்டீவன் கோ: அவர்கள் உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவர்களுக்கு வாக்காளர்கள் தேவை இல்லை. மனோதத்துவ நிபுணர்களே.