தமிழ்ப் பள்ளிகள் மீது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க இருவருக்கு அனுமதி

muhaiதமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மீது அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக கூறிக் கொண்டு அதன் மீது பிரதமரையும் துணைப் பிரதமரையும் கேள்வி கேட்பதற்கு கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கும் மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருக்கும் சட்டப்பூர்வத் தகுதி இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக இன்று அறிவித்த அந்த முடிவைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குப் போட முடியும்.

நீதிபது முகமட் ஹிஷாமுடின் முகமட் யூனுஸ் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அந்த முடிவைச் செய்தது. நீதிபதி அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம், நீதிபதி முகமட் அரிப் முகமட் யூசோப் ஆகியோர் மற்ற நீதிபதிகள் ஆவர்.

அந்த முடிவைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டது. வழக்கு நிர்வாகத்துக்கும் ஜனவரி 29ம் தேதியை அது நிர்ணயம் செய்தது.

அந்த வழக்கைத் தொடருவதற்கு சட்டப்பூர்வத் தகுதி மனோகரனுக்கும் உதயகுமாருக்கும் இல்லை என கூறப்பட்ட ஆட்சேபத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மேல் முறையீடு செய்து கொண்டிருந்தனர்.