DAP தேர்தல் பிரச்சார வாகனத்தைத் திருடும் முயற்சி முறியடிக்கப்பட்டது

dap2டிஏபி கட்சி நேற்று கிட்டத்தட்ட தனது இன்னொரு பிரச்சார வாகனத்தை இழந்திருக்கும். நல்ல வேளையாக உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் அந்த வாகனத்தைத் திருடும் முயற்சி பற்றி கட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததால் அது முறியடிக்கப்பட்டது.

அந்த விவரங்களை டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் வெளியிட்டார்.

கோலாலம்பூர் புடு-வில் டிஏபி தலைமையகத்துக்கு அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில் அந்த வாகனம் நிறுத்தப்ப்பட்டிருந்தது.

அந்த வாகனத்துக்குள் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் காணப்பட்டதைத் தொடர்ந்து காய்கறி வியாபாரி ஒருவர் அவரை விசாரிக்கச் சென்றதாக வான் குவாய் மே என்ற அந்த உணவு விடுதி உரிமையாளர் சொன்னார்.

“அந்த வாகனம் அவருக்குச் சொந்தமானதா என அந்தக் காய்கறி வியாபாரி அந்த நபரிடம் வினவியுள்ளார்.”

“அந்த நபர் பதில் அளிக்காமல் தொலைபேசியில் பேசுவது போல பாசாங்கு செய்தார். அடுத்து அந்த வியாபாரியைத் தாக்கி விட்டு ஒடி விட்டார்.”dap1

“அந்த வியாபாரி பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றை இரவலாகப் பெற்று அந்த நபரை விரட்டினார். ஆனால் அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை,” என வான் நிருபர்களிடம் கூறினார்.

அந்த வியாபாரிக்கு கையில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

150,000 ரிங்கிட் மதிப்புள்ள அந்த வாகனத்தின் இடது பக்க கதவில் உள்ள பூட்டு சேதமடைந்துள்ளது.

பூட்டை உடைத்த பின்னர் எந்திரத்தை முடுக்கி விடுவதற்கு திருடன் முயன்றிருக்க வேண்டும் என டிஏபி  பொருளாளர் போங் குய் லுன் கூறினார்.

கார்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் வாகனத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டன.

போலீஸ் குழு ஒன்று விசாரணை நடத்துவதற்காக பின்னர் அங்கு வந்தது.

கடந்த நவம்பர் மாதம் ஜோகூர் டிஏபி மகளிர் பிரிவுத் தலைவியின் கடை வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த டிஏபி தேர்தல் பிரச்சார வாகனம் ஒன்று களவு போனது.

TAGS: