கௌரவமில்லாத பேச்சாளர் அம்னோவுடன் தொடர்புடைய கட்சியில் இருந்தவர்

bhavaniஅண்மையில் Universiti Utara Malaysia (UUM)ல் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரை திட்டிய ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின்-னிடமிருந்து அம்னோ  தலைவர்கள் ஒதுங்கியுள்ள போதிலும் அவர் அம்னோ வட்டாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அவர் கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸில் முன்பு மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாக ஷாரிபா ஜொஹ்ரா இருந்துள்ளதை அந்தக் கட்சியின் தலைமையகம் தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தியது. இப்போது அந்தப் பொறுப்பில் நபீசா மாமு இருந்து வருகிறார்.

கிம்மா அம்னோவில் ஒர் இணைக் கட்சியாகும். இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதிப்பதாக அது கூறிக் கொள்கின்றது. அது பல தேர்தல்களில் பிஎன் -னுக்காக பிரச்சாரம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிம்மா ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார். அப்போது அவர் கிம்மா “பிஎன் -னுக்கு அணுக்கமான விசுவாசமான நண்பர்” என வருணித்தார்.

என்றாலும் கட்சியில் ஷாரிபா ஜொஹ்ரா-வின் நிலையை உறுதிப்படுத்திய கிம்மா தலைமையகம் எவ்வளவு காலம் அவர் மகளிர் துணைத் தலைவியாக இருந்தார் என்பதைத் தெரிவிக்கவில்லை.

அரசாங்க நிகழ்வுகளில் அவர் ஒர் விஐபி (மிக முக்கியப் பிரமுகர்)

bhavani12011ம் ஆண்டு இறுதி வரையில் அவர் அந்தப் பதவியில் இருந்தது கூக்குள் இணையத் தளத்தில் தேடிய போது தெரிய வந்தது. அவர் மலாக்கா தஞ்சோங் பிடாராவில் இளைஞர் நிகழ்ச்சி ஒன்றில் மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாமுடன் காணப்படும் படமும் உள்ளது.

தகவல் அமைச்சில் இயங்கும் ஒர் அமைப்பான ஜாசா எனப்படும் சிறப்பு விவகாரப் பிரிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொண்ட விஐபி-க்களில் ஷாரிபா ஜொஹ்ரா-வும் ஒருவர் படம் ஒன்றில்  றிக்கப்பட்டுள்ளது.

2011 பிப்ரவரி மாதம் ஷாரிபா ஜொஹ்ரா தமது முகநூல் பக்கத்தில் கிம்மா நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளுமாறு மக்களை அழைத்துள்ளார். அந்தக் கட்சியில் அவர் மகளிர் துணைத் தலைவியாக இருந்ததை அது உறுதி செய்தது.

ஷாரிபா ஜொஹ்ராவோ அல்லது அவர் இப்போது தலைவியாக இருக்கும் சுவாரா வனிதா சத்து மலேசியா என்ற அரசு சாரா அமைப்போ பிஎன் -னுடன் தொடர்புடையவர்கள் அல்ல என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கூறியுள்ளதற்கு மாறாக அந்த விவரங்கள் உள்ளன.

“அந்த UUM பிரச்னையில் தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்: ஜபின் லேடி பிஎன் -னைப் பிரதிபலிக்கவில்லை. அவ்வளவு தான்,” என கைரி தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,

அவர் ஒரே மலேசியா சின்னத்தை அணிந்திருப்பதை இணைய மக்கள் சுட்டிக் காட்டிய போது ஒரே மலேசியா சின்னத்தை யார் வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்த முடியும். அவரைப் பற்றியோ அல்லது அவரது அமைப்போ பற்றியோ யாருக்கும் தெரியாது.”

“பிஎன் -னுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை,” என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

UUMல் இரண்டாம் ஆண்டு சட்டக் கல்வி மாணவியான கேஎஸ் பவானிக்கு எதிராக ஷாரிபா ஜொஹ்ரா நாகரீகமற்ற நடந்து கொண்டதை உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லாவும் சாடியுள்ளார்.

“நான் அந்த வீடியோவை பார்த்தேன். அந்த மாணவியை நான் அவ்வாறு நடத்த மாட்டேன்.”

“அந்த மாணவி பேசி முடிக்க அனுமதிக்க வேண்டும். அதனை ஒப்புக் கொள்ளா விட்டால் விவேகமான முறையில் பதில் சொல்லுங்கள். கீழ்த்தரமாகப் பேசக் கூடாது தரக்குறைவாகவும் பேசக் கூடாது,” என தமக்கு டிவிட்டரில் அனுப்பப்பட்ட செய்திகளுக்குப் பதில் அளித்த சைபுதின் சொன்னார்.

பின்னர் அவர் தமது கைத் தொலைபேசி எண்ணை டிவிட்டரில் வெளியிட்டார். தமக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அவர் பவானியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நான் இப்போது தான் பவானியுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மிகுந்த உற்சாகமுடன் காணப்படுகிறார்.”

பவானியும் டிவிட்டரில் துணை அமைச்சருக்குப் பதில் அளித்தார்: மிக்க நன்றி சகோதரரே (saudara) உங்கள் அழைப்புக்கு நன்றி கூறுகிறேன். அது என மிகவும் ஊக்கமூட்டுகின்றது. எல்லா அமைச்சர்களும் உங்களைப் போன்று இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுடன் தேநீர் அருந்தக் காத்திருக்கிறேன் !”

அந்தக் கருத்தரங்கில் தமது அமைச்சு சம்பந்தப்படவில்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினருமான சைபுடின் சொன்னார்.

ஷாரிபா ஜொஹ்ராவுடன் பவானி துணிச்சலுடன் வாதம் செய்ததைக் காட்டும் 24 நிமிட வீடியோ, யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டதும் அது வெகு வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து பல இணையப் பயனாளிகள் பவானியைப் பாராட்டினார்கள்.

ஆறு நாட்களுக்கு முன்பு இணையத்தில்  சேர்க்கப்பட்ட அந்த வீடியோவை இன்று பிற்பகல் வரையில் மொத்தம் 224,000 பேர் பார்த்துள்ளனர்.

பவானி ஜெரிட் போராளி

தமது முகநூல் பக்கத்திலும் டிவிட்டர் பக்கத்திலும் நண்பர்களாவதற்கு 2,000 பேர் அழைப்பு விடுத்துள்ளதாகவும்  தமக்கு ஆதரவு தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருப்பதாகவும்  பவானி தெரிவித்தார்.

“மக்களுக்கு காலை வணக்கம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் எனக்கு வலிமையை தந்துள்ளீர்கள். மாற்றத்துக்கான போராட்டத்தில் நான் மட்டும் தனியாக இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது,” என அவர் டிவிட்டரில் சொன்னார்.

ஷாரிபா ஜொஹ்ராவுக்கு எதிராக செக்ஸ் ரீதியிலான கருத்துக்கள் எதனையும் சொல்ல வேண்டாம் என்றும் பவானி கேட்டுக் கொண்டார்.

“மனிதன் என்ற முறையில் நான் அவரை ஒரு பெண்-ஆக மதிக்கிறேன். நன்றி.”

பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோஷலிசக் கட்சியின் கீழ் நிலை இயக்கமான ஜெரிட்டில் (ஒடுக்கப்பட்ட மக்கள் கட்டமைப்பு) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பவானி பணியாற்றுகின்றார்.

தாம் ‘பிஎஸ்எம்-மினால் கற்பிக்கப்பட்ட மாணவி’ என்றும் அவர் டிவிட்டரில் பெருமையுடன் அறிவித்துக் கொண்டுள்ளார்.