மலேசியாவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உரிமையை பெற்றுள்ள, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கிளர்ச்சி படைத் தளபதி ஒருவர், மோரோ தேசிய விடுதலை முன்னணியைச் (MNLF) சேர்ந்த தாமும் ஆறு இதர தளபதிகளும் அதிகாரிகளும் 1975ம் ஆண்டு சபாவுக்குள் நுழைந்ததாக இன்று தெரிவித்துள்ளார்.
அப்துல் கலீல் அரானி என்ற அவர் சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்பு சாட்சியமளித்தார். ‘komander janggut’ (தாடி வைத்துள்ள தளபதி) என்றும் அவர் அழைக்கப்படுகின்றார்.
பிலிப்பீன்ஸில் உள்ள மிண்டானோ தீவிலிருந்து MNLF படகு ஒன்றில் தமது குழு சபா, சண்டக்கானை சென்றடைந்ததாக அவர் தெரிவித்தார்.
“எங்களிடம் துப்பாகி ரவைகளும் உணவும் இல்லை. சக முஸ்லிம் நாடு ஒன்றிடமிருந்து நாங்கள் உதவிகளைப் பெற விரும்பினோம்,” என கலீல் ஆர்சிஐ-யிடம் கூறினார்.
பிலிப்பீன்ஸில் அப்போதைய அதிபர் பெர்டிணாண்ட் மார்கோஸுக்கும் தென் பிலிப்பீன்ஸில் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த உள்நாட்டுப் பூசல் பற்றியே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
( இன்னும் தொடரும்)