பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘திடீர் குடி மக்களில்’ கீழறுப்பு சக்திகளும் இருக்கலாம் என ஆர்சிஐ-யிடம்…
சட்ட விரோதமாக நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற்ற அந்நியர்களில் கீழறுப்புச் சக்திகளும் இருக்கக் கூடும் என்றும் அதனால் அடையாளக் கார்டு திட்டம் (Project IC) தேசியைப் பாதுகாப்புக்கு மருட்டலானது என போலீஸ் சிறப்புப் பிரிவு இன்று கூறியது. "அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பது…
ஏஜி: ஆர்சிஐ முடிவுகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
சபாவில் கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் வழங்கும் அறிக்கை அல்லது முடிவுகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். கிரிமினல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுகள் சரி செய்யப்படும்…
டாக்டர் மகாதிருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம்
இன்று, 21 என்ஜிஓ-க்களைச் சேர்ந்த சுமார் 20 சமூக ஆர்வலர்கள், மெர்டேகாவுக்குமுன் ஒரு மில்லியன் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். மகாதிர் அவ்வாறு கூறியது சீனர்கள் மற்றும்…
கெரக்கான்: டாக்டர் மகாதீரின் அறைகூவல் ‘அவநம்பிக்கையை’ ஏற்படுத்தி விடும்
மெர்தேக்காவுக்கு முன்பு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனை 'அவநம்பிக்கையை' ஏற்படுத்தி மலேசியர்களுடைய ஐக்கியத்தைப் பாதித்து விடும் என்று கெரக்கான் கூறுகிறது. மகாதீர் யோசனை 'உதவி செய்யாது, பொருத்தமற்றது' என்றும்…
ஆர்சி-இடம் உண்மை உரைக்க தயாரா? அன்வாருக்கு அம்னோ சவால்
சாபா குடியேற்றக்காரர்கள்மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் (ஆர்சிஐ) கள்ளக் குடியேறிகள் பற்றிய உண்மையைச் சொல்லும் துணிச்சல் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு உண்டா என்று சாபா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் சாலே சைட் குருவாக் சவால் விடுத்துள்ளார். அதைச் சொல்லும் கடப்பாடு அன்வாருக்கு உண்டு…
ஆர்சிஐ முடியும் வரை காத்திருங்கள் என்கிறார் கைரி
சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தையும் சுதந்திரத்துக்கு முன்பு இந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்ட பிரச்னையையும் இப்போதைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கூறுகிறார். அதற்குப் பதில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற…
சாபா பெர்சே: ஆர்சிஐ டாக்டர் மகாதிருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்
சாபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) சாட்சியம் அளிக்க ‘வாக்குகளுக்கு-குடியுரிமை’என்று கூறப்படும் திட்டம் அமலானபோது மாநிலத்திலும் மத்திய அரசிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உள்பட, அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்று சாபா பெர்சே கேட்டுக்கொண்டிருக்கிறது. “சாபா பெர்சே, ஆர்சிஐ…
அம்பிகா: ஆர்சிஐ நடவடிக்கை எடுக்கும் வரை இசி காத்திருக்கக் கூடாது
சபாவில் சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளதால் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்…
மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என…
மலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார். என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர்…
‘பொதுத் தேர்தலுக்குமுன் ஆவி வாக்காளர்களைத் துடைத்தொழியுங்கள்’
சாபாவில் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகக் கூறப்படுவதை விசாரித்துவரும் அரச Read More
‘மொரோ’ கிளர்ச்சி படைத் தளபதிக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி (…
மலேசியாவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உரிமையை பெற்றுள்ள, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கிளர்ச்சி படைத் தளபதி ஒருவர், மோரோ தேசிய விடுதலை முன்னணியைச் (MNLF) சேர்ந்த தாமும் ஆறு இதர தளபதிகளும் அதிகாரிகளும் 1975ம் ஆண்டு சபாவுக்குள் நுழைந்ததாக இன்று தெரிவித்துள்ளார். அப்துல் கலீல் அரானி என்ற அவர் சபா குடியேற்றக்காரர்கள்…
டாக்டர் மகாதீர்: ஆம், பிலிப்பீனோக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார். "அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது." "அவர்களில் பலர் சபாவில்…