கெரக்கான்: டாக்டர் மகாதீரின் அறைகூவல் ‘அவநம்பிக்கையை’ ஏற்படுத்தி விடும்

1addமெர்தேக்காவுக்கு முன்பு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனை ‘அவநம்பிக்கையை’ ஏற்படுத்தி மலேசியர்களுடைய ஐக்கியத்தைப் பாதித்து விடும் என்று கெரக்கான் கூறுகிறது.

மகாதீர் யோசனை ‘உதவி செய்யாது, பொருத்தமற்றது’ என்றும் அந்த பிஎன் உறுப்புக் கட்சியின் துணைத் தலைவர் சாங் கோ யூவான் சொன்னார்.

“டாக்டர் மகாதீர் அறிக்கை சமூகத்துக்கு எந்த நன்மையையும் கொண்டு வரப் போவதில்லை. அதே வேளையில் மலேசியர்களுடைய ஒற்றுமையையும் பாதிக்கும்.”

“அத்தகைய பயனற்ற கருத்துக்கள் மலேசியர்களிடையே அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் உருவாக்கி விடக் கூடும்,” என அவர் விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னோர்கள் ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் சுதந்திரத்துக்கு முன்பு குடியுரிமைகள் கொடுக்கப்பட்டன, அதனால் நாம் அதனை மதிக்க வேண்டும் என்றும் சாங் சொன்னார்.chang

அதே கருத்தை கெரக்கான் தலைவர் கோ சூ கூன் -னும் தெரிவித்துள்ளார். அது ‘வரலாற்று உண்மை’. ஆகவே அதனை எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

“அத்தகைய கருத்துக்களை மதிக்கப்படும் முதிய அரசியல்வாதி ஒருவர் சொல்லியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.”

அணுக்கமான உதவியாளர்கள் மீது பழி போடப்பட்டது

சுதந்திரத்துக்கு முன்பு ஒரு மில்லியன் மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமைகள் கொடுக்கப்பட்டது மீதுஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என மகாதீர் யோசனை தெரிவித்திருந்தார்.

சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ விசாரணையில் பல தகவல்கள் வெளியான பின்னர் அவர் அந்த யோசனையைத் தெரிவித்திருந்தார்.

சபாவில் நிகழும் ஆர்சிஐ விசாரணையில் சாட்சியமளித்தவர்கள், சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்ட நடவடிக்கைக்கு மகாதீருடைய அணுக்கமான உதவியாளர்கள் மீது பழிபோட்டனர்.

 

TAGS: