சாபா பெர்சே: ஆர்சிஐ டாக்டர் மகாதிருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்

1sabah bersihசாபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) சாட்சியம் அளிக்க ‘வாக்குகளுக்கு-குடியுரிமை’என்று கூறப்படும் திட்டம் அமலானபோது மாநிலத்திலும் மத்திய அரசிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உள்பட, அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்று சாபா பெர்சே கேட்டுக்கொண்டிருக்கிறது.

1abdul gani“சாபா பெர்சே,  ஆர்சிஐ புதிய சாட்சிகளை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காக மகாதிர் உள்பட, சாபா முதலமைச்சர் மூசா அமான், சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் (வலம்), ஹெர்மன் லுபிங், கே.ஒய். முஸ்தபா போன்றோருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

“ஆர்சிஐ-இன் விசாரணைக்கு உள்பட்ட காலத்தில் அவர்கள் அனைவரும் அரசாங்கப் பொறுப்பில் இருந்தவர்கள்”, என்று சாபா பெர்சே தலைவர் எண்ட்ரு அம்ப்ரோஸ் கூறினார். அவர் இவ்வாறு கேட்டுக்கொள்வள்ளும் காணொளி பதிவு ஒன்று இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் காண்பிக்கப்பட்டது.

ஹெர்மன், சாபாவின் முன்னாள் சட்டத்துறை தலைவர். முஸ்தபா, சாபாவின் முன்னாள் மாநிலச் செயலாளர். இருவருமே சாபா ஆர்சிஐ ஆணையர்களாக உள்ளனர்.

ஆணையத்தின் மற்ற ஆணையர்கள், சாபா, சரவாக் முன்னாள் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம், சாபா யுனிவர்சிடி மலேசியா முன்னாள் உதவி வேந்தர் கமருஸமான் அம்போன், மலேசிய குற்றச்ச்செயல் தடுப்பு அறநிறுவனத்தின் துணைத் தலைவர் ஹென்ரி சின் பொய் வூ ஆகியோராவர்.

TAGS: