துங்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்தார் – மகாதீர் கள்ளக் குடியேறிகளைக் கொண்டு வந்தார்

1drm tunku“இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை. தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்”

லிம் கிட் சியாங் மாக்தீரிடம் சொல்கிறார்: துங்கு நல்ல வெளிச்சத்தில் அடையாளக் கார்டுகளைக் கொடுத்தார்.

அன்ஸ்பின்: மலேசியாவை உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக்கிய ஒரு மில்லியன் மலாய்க்காரர் அல்லாதாருக்கு ( அவர்களது வாரிசுகள் ) பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்யும் பொருட்டு முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் குடியுரிமை கொடுத்தார்.

மலேசியாவில் சபா மிக ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்ததால் நான்காவது பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தன்மூப்பாக நூறாயிரக்கணக்கான குடியுரிமைகளை வழங்கியதை அதனுடன் ஒப்பிடவே முடியாது.

கேகன்: சுதந்திரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக துங்கு மலாயாவில் தகுதி பெற்ற மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை வழங்கினார்.

பிஎன் -னுக்கு வாக்களிக்க அந்நியர்களைப் பயன்படுத்தி ஜனநாயக நடைமுறையை வேரறுக்கும் நோக்கம் கொண்ட மகாதீருடைய அந்த தீய அடையாளக் கார்டு திட்டத்துக்கும் என்ன சம்பந்தம் ?

நியாயமானவன்: துங்கு மலேசியாவுக்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்ததை நாம் அறிவோம். ஆனால் டாக்டர் மகாதீர் கள்ளக் குடியேறிகளை மலேசியாவுக்குள் கொண்டு வந்தார். இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை.

தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலையும் துங்குவையும் அவமானப்படுத்த வேண்டாம்.

மலேசிய இனம்: மகாதீர் எப்போதும் யார் மீதாவது பழி போட்டுக் கொண்டு தான் இருப்பார். ஒரு மில்லியன் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் குடியுரிமை கொடுக்கப்பட்டது தீய செயல் என்றும் அதனால் துங்கு தம்மை விட மோசமானவர் என்றும் மகாதீர் சொல்கிறார்.

அதன் மூலம் தாம் ஒர் இனவாதி என்பதை மகாதீர் காட்டி விட்டார். அத்தகையை சொற்களைச் சொன்னதற்காக சீனர்களும் இந்தியர்களும் அவரை கண்டிக்க வேண்டும்.

உங்கள் அடிச்சுவட்டில்: மகாதீர் மீது எனக்கு இருந்த கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய் விட்டது. துங்கு காலத்தில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது பற்றி அவர் மறைமுகமாக கேள்வி எழுப்புகிறார்.

நீங்கள் ஒரு முட்டாள். அவ்வாறு குடியுரிமைகளைக் கொடுக்காமல் இருந்தால் மலாயாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? நீங்கள் தண்ணீரைக் குடிப்பீர்கள். ஆனால் அதன் ஆதாரம் ஒரு போதும் உங்களுக்குத் தெரியாது.

வெறுப்படைந்தவன்: மகாதீர் விடுத்துள்ள அறிக்கை பற்றி மசீச, மஇகா, பிபிபி மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகள் என்ன சொல்லப் போகின்றன ? உங்கள் உறுப்பினர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர் கூறுகின்றார். அத்துடன் பயங்கரவாதிகள் உட்பட சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை அதனுடன் இணைத்து நியாயப்படுத்துகிறார்.

ABU, Don’t Play Play: டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் அவர்களே நீங்கள் மிக நல்ல கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். துங்கு நல்ல பகல் வெளிச்சத்தில் இந்த நாட்டில் பல தசாப்தங்களுக்கு மேல் வாழ்கின்றவர்களுக்குக் குடியுரிமையைக் கொடுத்தார். (அது பல நிபந்தனைகளுடன் ஒரு பிரதேசத்தில் பிறந்த ஒருவருக்கு உள்ள உரிமையின் கீழ் கொடுக்கப்படும் குடியுரிமை)

சபாவில் அம்னோவை ஆதரிக்கும் முஸ்லிமாக இருக்கும் எந்த அந்நியருக்கும் டாக்டர் மகாதீர் குடியுரிமையை வழங்கினார். அது தான் வேறுபாடு. அவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் மிண்டானோவைச் சேர்ந்த பிலிப்பீனோக்கள் மட்டுமல்ல. கலிமந்தானைச் சேர்ந்த இந்தோனிசியர்கள் மட்டுமல்ல.

பர்மாவைச் சேர்ந்த ரொஹிங்யாக்கள், கம்போடியாவைச் சேர்ந்த சாம் இன மக்கள் ஆகியோரையும் மறக்க வேண்டாம். இந்த உலகில் சமய அடிப்படையில் குடியுரிமை கொடுத்த ஒரே தலைவர் டாக்டர் மகாதீராக மட்டுமே இருக்க வேண்டும்.

மசீச, மஇகா, பிபிபி மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன ? அம்னோவில் உள்ள உங்கள் நண்பர்கள் இது பற்றி உங்களிடம் ஏதும் சொன்னார்களா ?

எரினெஸ்: “அந்த உடனடி அடையாளக் கார்டு ஊழலின் ‘தேசத் துரோக’ அம்சத்தை சற்று ஒதுக்கி வைப்போம். நமது மனித மூலதனத்தின் ஆற்றலை மகாதீரும் அம்னோவும் நலிவடையச் செய்து விட்டது கிரிமினல் குற்றமாகும்.

ஒரு பக்கம் அவர்கள் தங்கள் முறைகேடான நிர்வாகம், ஊழல், இனவாதக் கொள்கைகள் வழி நாட்டின் சிறந்த மூளைகள் வெளியேறுவதற்கு வகை செய்து விட்டனர்.

இன்னொரு பக்கம் அவர்கள், எத்தகைய தொழில் திறமையும் இல்லாத அந்நியர்களுக்குக் குடியுரிமைகளை வழங்கியதின் வழி நமது மக்கள் தொகையை உயர்த்தினர்.

பச்சை புல் வெளியை நாடி வெளியேறி விட்ட நிபுணர்களைத் திரும்பக் கொண்டு வருவதற்கு Talent Corp ( ஆற்றல் நிறுவனம் ) மூலம் மில்லியன் கணக்கில் பிரதமர் நஜிப் ரசாக் செலவு செய்வதை மறக்க வேண்டாம்.

 

TAGS: