‘துங்குவை இழுப்பதின் மூலம் பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி மலாயாவின் சுதந்திர வரலாற்றையே திருத்த முயலவேண்டாம்’
மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை ஆர்சிஐ அமைக்க வேண்டும் என மகாதீர் யோசனை
தேதாரேக்: சுதந்திரத்துக்கு ஈடாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் மலாயா வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை மகாதீர் உணர வேண்டும்.
மலாக்காவும் பினாங்கும் சிங்கப்பூரைப் போன்று சுதந்திர நாடுகளாக இருந்திருக்கும். சபாவும் சரவாக்கும் புருணையைப் போன்று சுதந்திர நாடாக இருந்திருக்கும் அல்லது சபா பிலிப்பின்ஸிலும் சரவாக் இந்தோனியாவிலும் இணைந்திருக்கும்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் போன்ற ‘வெள்ளை யானைகளை’ கட்டுவதற்கு பெட்ரோனாஸ் பணத்தைப் பயன்படுத்துவதற்கு ( கிழக்கு மலேசியாவிலிருந்து தான் அதிகமான பணம் ) மகாதீருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர் இன்றைய மலேசியாவில் பாதி அளவுக்கு மட்டுமே அவர் பிரதமராக இருந்திருப்பார்.
ஸ்விபெண்டர்: சுதந்திரத்துக்கு முன்பு மலாயாவில் வாழ்ந்த அனைவரும்- அவர்கள் மலாய்க்காரர்களாக, சீனர்களா, இந்தியர்களா அல்லது மற்றவர்களாக இருந்தாலும் மலேசியக் குடிமக்கள் அல்ல. அவர்கள் பிரிட்டிஷ் பிரஜைகளாக இருந்தனர் அல்லது தங்கள் சுல்தான்களின் பிரஜைகளாக இருந்தனர்.
மலேசியா என்ற ஒரு நாடே இல்லை. மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அல்லது மற்றவர்கள் (சபா சரவாக்கில் வசித்தவர்கள்) ஆகியோரின் இணக்கத்துடனும் ஒப்புதலுடனும் தான் பிரிட்டிஷ்காரர்கள் நமக்கு சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.
மலாயா சுதந்திரத்துக்கு முந்திய கால கட்டம் மீது ஆர்சிஐ-யை அமையுங்கள். ரெய்ட் ஆணையம் போன்ற ஆவணங்களும் மற்ற எல்லா காலனித்துவ ஆவணங்களும் பிரிட்டிஷ் பழஞ்சுவடிக் காப்பகத்தில் ரகசிய நிலையிலிருந்து அகற்றப்பட்டு பொது மக்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். அதனால் மலேசியாவின் தோற்றத்திற்கும் நமக்கு சுதந்திரம் கிடைத்ததற்கும் வழி வகுத்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் மலாயா மக்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை விவாதிக்க முடியும்.
அம்னோ ஜோடித்துள்ள சமூக ஒப்பந்தம் அவற்றில் இருக்காது என நான் பந்தயம் கட்டத் தயார். அது ஒரு பொய் என்றும் தெரியும்.
ஆ பாஸ்: என் தந்தையை பிரிட்டிஷ்காரர்கள் இங்கு கொண்டு வந்தனர். அவர் பிரிட்டிஷ் சம்பளப் பட்டியலில் இருந்தார். அப்போது பிரிட்டிஷ்காரர்களே ஆட்சியாளர்கள். அப்போது அது மலாயா என அழைக்கப்பட்டது.
என் தந்தை பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார். பிரிட்டிஷ்காரர்கள் போன அவர் சம உரிமைகளை எதிர்பார்த்ததால் இங்கு தொடர்ந்து இருக்க முடிவு செய்தார். நாங்கள் குடியுரிமைக்கு மன்றாடவில்லை.
அவர்கள் அதிகாரத்தில் இருந்தனர். ஆகவே மகாதீருக்கு என்ன பிரச்னை ?
முனிசாமி சின்னையா: சுதந்திரத்துக்கு முந்திய அரசியல் சூழ்நிலையை மகாதீர் அறியாதவராக இருக்கவேண்டும் அல்லது அவர் அப்போதைய மலாயா பின்னர் மலேசியா சுதந்திரம் அடைந்ததைக் காண விரும்பாதவராக இருக்க வேண்டும்.
சுதந்திரத்துக்கு முன்பு குடியேற்றக்காரர்களுக்கு சுல்தான்கள், சுதந்திர இயக்கத்தை வழி நடத்திய மூன்று அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் இணக்கத்துடன் குடியுரிமை கொடுக்கப்பட்டது. அத்துடன் சுதந்திர மலாயாவுக்கு பிரிட்டிஷ்காரர்கள் விதித்த நிபந்தனைகளில் அதுவும் ஒன்றாகும்.
அப்போது இணக்கம் ஏற்பட்டிருக்கா விட்டால், மலாயாவை சுதந்திர மலாய் நாடுகளின் கூட்டரசு, சுதந்திர கூட்டரசு அல்லாத மலாய் நாடுகள், சுதந்திர நீரிணை குடியேற்றப் பகுதிகள் எனக் கூறு போட பிரிட்டிஷ்காரர்கள் தயாராக இருந்தனர்.
பெர்னார்ட் பிலிப்ஸ்: மெர்தேக்காவுக்கு முந்திய குடியேற்றக்காரர்கள் மீது ஆர்சிஐ-யை அமைப்பது நல்லயோசனையாகவும் இருக்கக் கூடும். துங்கு சட்டத்துக்கு இணங்க ஆட்சியாளர்களின் முழு ஒப்புதலுடன் அதனைச் செய்தார் என்பது தெரிய வரும்.
1957ம் ஆண்டுக்குப் பின்னர் அரசமைப்பு மலாய்க்காரரான இந்த மனிதர் உட்பட நமது பல அம்னோ தலைவர்களுடைய வேர்களும் இன வம்சாவளியும் அந்த விசாரணை மூலம் தெரிய வரும்.
தொடக்கப்பள்ளி பதிவேடுகளில் இளம் மகாதீர் த/பெ (மகன்) முகமட் ( Mahathir s/o (son of) Mohamad )எனக் குறிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது.
எனக்கு இந்திய முஸ்லிம்கள் மீது எந்த எதிர்ப்பு உணர்வும் இல்லை. நமது இந்த மகத்தான நாட்டின் வளமான பண்பாட்டுக் கலவைக்கு அவர்களும் பங்காற்றியுள்ளனர்.
உலகின் மற்ற பகுதிகளில் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை மீட்பதற்குப் போராடும் வேளையில் தங்கள் பாரம்பரியத்தை மறுக்கின்றவர்களையே நான் வெறுக்கிறேன்.
போதும் போதும்: டாக்டர் மகாதீர் அவர்களே நீங்கள் பிரதமராக இருந்த காலத்தில் சபா மாநிலத்தின் இயற்கைவளங்களை உங்கள் அரசியல் கட்டுக்குள் வைத்திருக்கும் தீய நோக்கம் உங்களுக்கு இருந்ததை மறைக்க வேண்டாம்.
துங்குவை இழுப்பதின் மூலம் பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி மலாயாவின் சுதந்திர வரலாற்றையே திருத்த முயலவேண்டாம்.