“மகாதீருடைய பொய்களும் நேர்மையற்ற பொருத்தமற்ற செயல்களும் சிறிது சிறிதாக அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளன. அவர் எந்த அளவுக்கு வெறுக்கப்பட வேண்டிய கொடிய மனிதர் என்பதையும் அவை காட்டுகின்றன”
அரசமைப்பு சட்ட நிபுணர்: பிஎன் கட்சிகளும் ஆட்சியாளர்களும் டாக்டர் மகாதீருக்குப் பதில் சொல்ல வேண்டும்
ரூபன்: அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி அவர்களே, முஸ்லிம் அல்லாதாருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக சொல்லப்படும் அவதூறுகள், ஏற்படுத்தப்படும் அவமானங்கள் மீது நமது பிஎன் கட்சிகளும் ஆட்சியாளர்களும் கடந்த காலத்தில் பேசியதே இல்லை.
இதில் நீங்கள் இரட்டை வேடத்தை தெளிவாகக் காண முடியும். அது கொடுமையானது. அவர்கள் அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்து போராட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதில் தோல்வி கண்டுள்ளனர்.
சேரிப்பையன்: மகாதீருடைய பொய்களும் நேர்மையற்ற பொருத்தமற்ற செயல்களும் சிறிது சிறிதாக அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளன. அவர் எந்த அளவுக்கு வெறுக்கப்பட வேண்டிய கொடிய மனிதர் என்பதையும் அவை காட்டுகின்றன.
தமது நடவடிக்கைகளை தற்காப்பதற்கு அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் அவரது முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. மக்களுக்கும் நாட்டுக்கும் அவர் செய்த பல நேர்மையற்ற காரியங்கள் சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணைய விசாரணையில் தொடர்ந்து அம்பலமாகும்.
அடையாளம் இல்லாதவன் #84319416: நான் ஒரு காலத்தில் மகாதீர் மீது மிக்க மதிப்பு வைத்திருந்தேன். சுதந்திரத்துக்கு முன்பு துங்கு தகுதி இல்லாத மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார் என அவர் கடந்த வாரம் சொன்னதும் அந்த மரியாதை கரைந்து விட்டது. மகாதீர் சொன்னதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அது பிஎன் தன்மையையும் காட்டியுள்ளது. அதற்கு எல்லோருடைய வாக்குகளும் வேண்டும். ஆனால் நம்மில் சிலருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் அது எண்ணுகின்றது. அனைவரையும் ‘கவனித்துக் கொண்ட’ மனிதரே அதனைச் சொல்கின்றார்.
ஹாங் துவா பிஜே: என் தாயார் நெகிரி செம்பிலான் லாபுவில் பிறந்தவர். அவர் தமது பெற்றோர்களுடன் இலங்கைக்குச் சென்றார். பின்னர் திரும்பி மலேசியாவில் பிறந்த என் தந்தையை திருமணம் செய்து கொண்டார். அவர் இன்னும் சிவப்பு நிற அடையாளக் கார்டு தான் வைத்துள்ளார்.
இப்போது அவருக்கு வயது 84. 17 வயதிலிருந்து அவர் இந்த நாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு மலேசியர்களான எட்டுப் பிள்ளைகள். நிறைய மலேசியப் பேரப் பிள்ளைகள். அவர்களில் சிலர் மலாய்க்காரர்கள்.
அவர் மலேசியாவில் பிறந்ததற்கான சான்றிதழ் இருந்த போதிலும் அவருக்கு ஏன் குடியுரிமை கிடைக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அவர் முஸ்லிமாக இருந்தால் நீண்ட காலத்துக்கு முன்பே அவருக்கு அது கிடைத்திருக்கும்.
பாஷ்: அமைதியாக இருங்கள். இயற்கை வலியது. கால ஒட்டத்தில் எல்லாத் தவறுகளும் அம்பலமாகி திருத்தப்படும். யார் நல்லது செய்தார்கள் யார் தீங்கு செய்தார்கள் என்பதை நாட்டின் வரலாற்று ஏடுகளே நிர்ணயம் செய்யும்.
தீய எண்ணம் கொண்ட ஒருவருடைய காரியத்தினால் எதிர்காலத் தலைமுறைகள் எவ்வளவு சிரமப்படப் போகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். காலஞ்சென்ற துங்கு மீது எனக்கு எப்போதும் நல்ல உணர்வுகளே உண்டு. அவர் நாகரீகமான மனிதர்.
அடையாளம் இல்லாதவன்#75854042: இதற்கு யாரைக் குற்றம் சொல்வது ? தங்கள் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் பேசுவதற்கு அவரை அரசு சாரா அமைப்புக்களும் பல்கலைக்கழகங்களும் மற்ற அமைப்புக்களும் அழைப்பது தானே காரணம். அவர் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நஜிப் ரசாக், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோரை சிறுமைப்படுத்துகிறார்.
டாக்டர் மகாதீர் தாம் செய்த தவறுகள் காரணமாக இப்போது தமது சொந்த நிழலைக் கண்டு கூட அஞ்சி வாழ்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் அந்த மனிதரை அழைக்காமல் இருப்பதே அவரை நிறுத்துவதற்கு ஒரே வழி. அவர் கௌரவமாக ஒய்வு பெற அனுமதிக்க வேண்டும்.
முஷிரோ: தேசத் துரோகத்தைச் செய்துள்ள மகாதீர் இப்போது பதற்றத்தை ஏற்படுத்த முயலுவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசாங்கமும் போலீசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது.
மஹாஷித்லா: அந்த மனிதர் மதிநுட்பம் நிறைந்தவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒரு கிரிமினலுக்கு உள்ள உயிரணுக்களே அவரிடம் உள்ளன.