மிக அதிகமான பெரும்பான்மை அரசாங்கம் என்ற கால கட்டம் முடிந்து விட்டது

voters‘இன்றைய வாக்காளர்கள் விவேகமானவர்கள். மிக அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்களின் சர்வாதிகார வழிகளுக்கு திரும்ப அவர்கள் விரும்பவில்லை’

‘தேர்தலில் பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’

ஜெரார்ட் லூர்துசாமி: 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதே என் கணிப்பு. தொங்கு நாடாளுமன்றம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எது எப்படி இருந்தாலும் ரசாக் வெளியேற்றப்படுவது திண்ணம்.

மிக குறுகிய பிஎன் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க உதவாது. ஏனெனில் கிழக்கு மலேசிய எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்குத் தாவலாம் அல்லது தங்களை பக்காத்தான் ஆதரவு சுயேச்சை எம்பி-க்களாக அறிவித்துக் கொள்ளலாம்.

பக்காத்தானுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை கிடைக்குமானால் அதன் எம்பி-க்களுக்கு பிஎன் -னிடமிருந்து கையூட்டும் மிரட்டலும் வரலாம்.

என்றாலும் பக்காத்தான் எம்பி-க்கள் மாற மாட்டார்கள் என நான் எண்ணுகிறேன். ஏனெனில் அரசாங்கத்தில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கும் ஆசை அவர்களுக்கும் இருக்கும். அத்துடன் 1957 முதல் அவர்கள் அதற்காகக் காத்திருக்கின்றனர்.

எந்த வழியிலும் இரண்டு கூட்டணிகளுக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. காரணம்

இன்றைய வாக்காளர்கள் விவேகமானவர்கள். மிக அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்களின் சர்வாதிகார வழிகளுக்கு திரும்ப அவர்கள் விரும்பவில்லை. அதனால் மிக அதிகமான பெரும்பான்மை அரசாங்கம் என்ற கால கட்டம் முடிந்து விட்டது.

டேபி: மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல்கள் ஆய்வு மய்ய இயக்குநர் முகமட் ரெட்சுவான் மிகவும் துணிச்சலாக தமது எண்ணங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய வெளிப்படையான போக்கு காரணமாக அவர் வேலலயிலிருந்து கூட இடைநீக்கம் செய்யப்படலாம். உண்மையைப் பேசிய அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.

அனைவருக்கும் நியாயம்: பிஎன் வெற்றி பெற்று முஹைடின் யாசின் நமது பிரதமராகக் கூடும் என்ற எண்ணமே என்னைப் பயமுறுத்துகிறது. நாம் அந்த ஆபத்தை எதிர்கொள்ள வேண்டுமா ?

ஆவி வாக்காளர்கள் என்பது உண்மையான பிரச்னை. மோசடி செய்து வெற்றி பெறுவதற்கு எந்த அளவுக்கு  அந்த ஆவி வாக்காளர்கள் உதவுவார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.

மக்கள் விவேகமாக வாக்களித்து பக்காத்தான் வெற்றி பெற உதவுவர் என நான் நம்புகிறேன். தாங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் பிஎன் -னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்பதையும் பக்காத்தான் காட்டுவதற்கு அது வகை செய்யும்.

ரஹ்மான்: பிஎன் -னுக்கு 130 முதல் 140 நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கலாம். பக்காத்தானுக்கு 80 முதல் 90இடங்கள் வரை கிடைக்கலாம்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை. நடப்புச் சூழ்நிலையில் அத்தகைய பிஎன் வெற்றி மகத்தானது. நஜிப் பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் பிஎன் -னில் மிகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றவர் அவரே.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து தமது நகங்களைக் கடித்துக் கொண்டிருக்கலாம்.

பிஎன் இப்போது எந்த அன்புளிப்புக்களைக் கொடுத்தாலும் அது மக்கள் வரிப்பணத்திலிருந்து வருகின்றது, பிஎன் பணத்திலிருந்து அல்ல என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுடைய வாக்குகளை வாங்குவதற்காக அவை விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்காளர்கள் இப்போது முட்டாள்கள் அல்ல. விவேகமானவர்கள்.

ஜிமினி கிரிக்கெட்: எது எப்படி இருந்தாலும் நஜிப் வரலாறு ஆகி விடுவார். அம்னோ/பிஎன் -னும் அவ்வாறே. பக்காத்தான் வெற்றி பெற்று விடும்.

 

TAGS: