‘நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து சோதனை செய்தேன். அவரும் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். வாக்காளாராகப் பதிந்து கொண்டதே இல்லை.’
பெண் இந்தியாவில் கல்வி கற்கிறார். ஆனால் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்விபெண்டர்: இங்கு என்ன தான் நடக்கிறது ? ‘வாக்குகளுக்குக் குடியுரிமைக்கு’ திட்டத்துக்கு இணையாக யாரோ ஒருவர் பதிவு செய்யப்படாத வாக்காளர்களை பதிவு செய்து 13வது பொதுத் தேர்தலில் அறிந்த ஒருவருக்கு வாக்களிக்குமாறு செய்ய முயலுகிறார் என்றே நான் எண்ணுகிறேன்.
யாருக்கு அந்த புள்ளிவிவரங்கள் கிடைக்கும் ? அத்தகைய தந்திரத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தது இரண்டு அரசாங்க அமைப்புக்கள் கூட்டாக இயங்க வேண்டும். அவை எந்த அமைப்புக்கள் என ஊகிப்பதற்கு வெகு நேரம் பிடிக்காது.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அத்தகைய பதிவு பெற்ற வாக்காளர்களுடைய நிலை என்னவாகும் ? அவற்றை மறைப்பதற்காக 13வது தேர்தலுக்குப் பின்னர் அந்தப் பெயர்களுடைய பதிவுகள் ரத்துச் செய்யப்படுமா ?
இன்னும் பதிவு செய்யாதவர்கள் தங்கள் தகுதியை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நன்மைக்காக, எதிர்காலத் தலைமுறையினருடைய நன்மைக்காக உங்களுக்காக அதனைச் செய்யுங்கள்.
அடையாளம் இல்லாதவன்#47497449: திருச்செல்வம் வில்லிபுரம், வாக்களிப்பதற்காக உங்கள் புதல்வி நாடு திரும்ப வேண்டும். இல்லை என்றால் அவரது வாக்கு இழக்கப்பட்டு விடும். அதனை அதிகார வர்க்கம் பயன்படுத்திக் கொண்டு விடும்.
இதிலும் ‘சிறிய’ பிரச்னை உள்ளது- அந்த ‘போலி’ உங்கள் புதல்வி செல்லும் முன்னரே வாக்களித்து விடக் கூடும். அப்போது அவர் வாக்களிக்க முடியாது. ஆகவே அதிகாலையில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று விடுவது நல்லது.
மேப்பிள்சிராப்: வாக்காளர்களை தில்லுமுல்லு செய்கின்றவர்கள் எதிர்பார்க்கும் இடைவெளி அது தான். வெளிநாடுகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுடைய வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற ‘தந்திரம்’ பயன்படுத்தப்படுகிறதா என்பது தெரிந்து விடும்.
அடையாளம் இல்லாதவன்#74213613: உண்மையில் தற்போது எகிப்தில் படித்துக் கொண்டிருக்கும் எனது நண்பரது புதல்விக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. ஏதோ தீய நோக்கம் சம்பந்தப்பட்டுள்ளது.
அடையாளம் இல்லாதவன்#67264380: நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து பார்த்தேன். அவரும் ஒரு வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டில் கல்வி பயிலுகிறார். பதிவு செய்து கொள்ளவே இல்லை. ஏதோ ஒரு மோசடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் பதில் சொல்லுமா ?
கேகன்: திருச்செல்வம், தேர்தல் தினத்தில் உங்கள் மகள் மலேசியாவில் இருந்தால் காலையில் முதலில் வாக்களிக்கச் செய்யுங்கள். இல்லை என்றால் ஏற்கனவே ‘வாக்களித்து விட்டதை’ அவர் கண்டு பிடிக்கக் கூடும்.
அடையாளம் இல்லாதவன்_3e86: பிஎன் தேர்தல் ஆணையம் வழியாக வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவருடைய தகவல்களையும் திரட்டியிருக்க வேண்டும். இன்னும் பதிவு செய்யாதவர்களை (குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள்) பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் சார்பில் வாக்களிக்க ஆவி வாக்காளர்களை அனுப்பும்.
ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆகியோர் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் வாக்களிக்க வேண்டிய தொகுதி பற்றியும் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் பல வாக்காளர்கள் வாக்களிக்க இன்னொரு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பெர்ட் தான்: “அடுத்த பொதுத் தேர்தலின் போது என் புதல்வி மலேசியாவில் இருந்து அவரது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவரது வாக்கு “தவறாகப் பயன்படுத்தப்படுவதை” தடுக்க வாக்களிக்குமாறு நான் வற்புறுத்துவேன்.”
திருச்செல்வம் நன்றாக சொன்னீர்கள். ஆவி வாக்காளர் அவர் சார்பில் வாக்களித்து அது அவருடைய தேர்வாக இல்லாவிட்டால் அது இரட்டை மோசடியாகும். ஆவி வாக்காளர் அவரது இடத்தை எடுத்துக் கொண்டது ஒரு மோசடியாகும். இன்னொன்று தமது தேர்வுக்கு புறம்பான வேட்பாளருக்கு வாக்கு செலுத்தப்பட்டதாகும்.
ஜிஜிஜி: நாங்கள் இயல்பான பதிவைக் கேட்டீர்கள். தேர்தல் ஆணையம் அதனைச் செய்துள்ளது. அவர் வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள். சிலாங்கூரில் இன்னொரு ‘Ops Durian Busuk’கை நாங்கள் விரும்பவில்லை.
நமது நாணயத்தைக் காப்பாற்றுங்கள்: எந்த மலேசியர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்பதைக் கண்டு பிடித்து அவரை பதிவு செய்தனரா ? அவர்களுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது ? குடிநுழைவுத் துறையிலிருந்தா ?
தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள், தடை உத்தரவு பெறுங்கள். முழு ஆணையத்தையும் மாற்றுங்கள்.