‘அப்படி என்றால் மற்ற நாடுகளில் உள்ள எல்லா முஸ்லிம்களும் சமய நம்பிக்கையற்றவர்களா ?

harussani“அல்லாஹ்’ என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் எப்படித் தடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் ‘பொறுமை இழந்தால்’ என்ன நடக்கும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.”

முஸ்லிம்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தால் சமய நம்பிக்கையற்றவர்களாகி விடுவர்

 

தோலு: இந்த நாட்டில் முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த முஸ்லிம்கள் அனுமதித்தால் அவர்கள் சமய நம்பிக்கையற்றவர்களாகி விடுவர் என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

உலகம் முழுவதும் மக்கள் பின்பற்றுகிற சமயப் புரிந்துணர்வு, ஏற்றுக் கொள்ளும் தன்மை, நடைமுறைகள்  ஆகியவற்றை அறியாத வெறியர்களில் அவரும் ஒருவர்.

மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளிலும் இந்தோனிசியாவிலும் உள்ள கிறிஸ்துவர்களுக்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தங்கள் சமயத்தில் பயன்படுத்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் சமய நம்பிக்கையற்றவர் என அவர் சொல்ல வருகிறாரா ?

“இது இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுடைய பொறுமைக்குச் சவால் விடுப்பதாகக் கருதப்படும்” என அவர் சொன்னது முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மறைமுகமாக கேட்டுக் கொள்கிறாரா ?

அந்த அறிக்கை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறைகூவலைக் காட்டிலும் அதிகமாக தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா ? அச்சிடப்பட்ட பொருட்கள் மட்டுமே எரிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். ஆனால் முப்தி அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தும் முஸ்லிம் அல்லாதார் ‘உடல் ரீதியாக’ தாக்கப்பட வேண்டும் என விரும்புவதாகத் தெரிகிறது.

விஜய்47: ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் எப்படித் தடுக்க  வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் ‘பொறுமை இழந்தால்’ என்ன நடக்கும் என்பதையும் அவர்  விளக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#19098644: நியாயமே இல்லாத வெறுப்பை உமிழும் அந்த அறிக்கையின் அடிப்படையில்பார்த்தால், இந்த முட்டாளான அம்னோ தொடர்புடைய தீவிரவாதியைத் தவிர துருக்கி, சவூதி அரேபியா, இந்தோனிசியா, எகிப்து ஆகியவற்றிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் வாழ்கின்ற எல்லா முஸ்லிம்களும் சமய நம்பிக்கை இல்லாதவர்கள்.

நியாயமானவன்: Damara Care and Herbs Sdn Bhd நிறுவனத்தில் அதிகாரத்துவ திறப்பு விழாவில் அந்தபுனிதமான மனிதருக்கு என்ன வேலை ? அது அவருக்கு பொருள் மீது உள்ள நாட்டத்தைக் காட்டுகின்றது.

மஹாஷித்லா: சமய அறிஞர் ஒருவர் எப்போதும் நேர்மையானவராகக் காணப்பட வேண்டும். அவர் தமது கருத்துக்களிலிருந்து மாறுபடுகின்றவர்கள் மீது கடுமையான சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார். மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களைக் குறை சொல்லவும் மாட்டார். சமயம் நல்லதைப் போதிக்கிறது. கௌரவமான  மனிதர்களை உருவாக்குகின்றது.

தாம் விரும்புகின்ற தரப்பின் தவறுகள் தொடர்பில் ஒருவர் தமது கண்களை மூடிக் கொண்டு, அதனைத் தொடர்ந்து ஆதரித்து வந்தால் அவர் பெயரளவுக்கு மட்டுமே முஸ்லிம், இந்து, கிறிஸ்துவர் அல்லது பௌத்தர் .

அத்தகைய தவறுகளை அவர் தொடர்ந்து அங்கீகரித்தால் அவர் தமது சமயத்துக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. மாறாக பிசாசிடம் தமது ஆன்மாவை விற்று விட்டதாகவே கருதப்படும்.

ஜுலியா: மலேசியாவில் உள்ள முஸ்லிம்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து நியாயமற்ற போக்கும்அகங்காரமும் அதிகரித்துள்ளதாக தோன்றுவதற்கு என்ன காரணம் என்பது இப்போது தான் புரிகிறது. நான் மலாய் முஸ்லிம். அவரது கருத்து எனக்கு வெறுப்பைத் தருகின்றது.

 

TAGS: