“அம்னோ ஆட்சி அந்தப் போராளிகள் மீது தவறாகக் குற்றம் சாட்டி, அவர்களது வாழ்க்கையைச் சிரமமாக்கி விட்டது. அதற்கும் அது பதில் சொல்ல வேண்டும்.”
ஹிண்ட்ராப் மீதான நான்கு ஆண்டுத் தடையை அரசாங்கம் அகற்றியது
சின்ன அரக்கன்: ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பது இந்திய சமூக ஆதரவைப் பெறுவதற்கான தேர்தல் தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஹிண்ட்ரப்பை அரசாங்கம் முதலில் தடை செய்ததே கேலிக்கூத்தான விஷயமாகும்.
அந்த அமைப்பு பொது ஒழுங்கிற்கும் தேசியப் பாதுகாப்புக்கும் மருட்டல் எனத் தான் சொன்னதை அரசாங்கம் இன்று வரை நியாயப்படுத்தவே இல்லை.
என்னைப் பொறுத்த வரையில் ஹிண்ட்ராப் தொடர்ந்து வலுவான போராட்ட அமைப்பாக இருந்து நடுநிலைப் போக்கைப் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு அரசியல் கூட்டணியுடனும் சேரக் கூடாது. கொள்கைப் பிடிப்புடன் சமூகத்துக்கு அது தொடர்ந்து சேவை செய்ய அதுவே சிறந்த வழி.
டாக்டர் சுரேஷ் குமார்: ஹிண்ட்ராப்புக்கு இது இன்னொரு வெற்றி ஆகும். 54 ஹிண்ட்ராப் போராளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் அதன் தலைவர் பி உதயகுமார் மீது ஜோடிக்கப்பட்டுள்ள ‘தேசத் துரோக’ குற்றச்சாட்டையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உடனடியாகக் கைவிட வேண்டும்.
அம்னோ ஆட்சி அந்தப் போராளிகள் மீது தவறாகக் குற்றம் சாட்டி, அவர்களது வாழ்க்கையைச் சிரமமாக்கி விட்டது. அதற்கும் அது பதில் சொல்ல வேண்டும்.
பெர்ட் தான்: ஹிண்ட்ராப் மீதான நான்கு ஆண்டு காலத் தடை நீக்கப்பட்டுள்ளது மிகவும் குறைவானது, மிகவும் தாமதமானது. அரசாங்கம் நல்லதாக மாறியிருக்கிறது என்பதற்கு அது உத்தரவாதம் தரவில்லை. இந்திய வாக்காளர்களைக் கவரும் பொருட்டு எடுக்கப்பட்ட பொதுத் தேர்தல் நடவடிக்கையாகவே தெரிகின்றது.
ஹிண்ட்ராப்பை தடை செய்த தவறான முடிவுக்கு அரசாங்கம் மன்னிப்புக் கேட்டிருந்தால் ஒரளவு அதன் உண்மை நிலையைக் காட்டியிருக்கும்.
‘இன மேலாண்மையை’ வலியுறுத்தும் பிஎன் அரசாங்கம் சிறுபான்மை இனத்துக்குச் சொந்தமான ஒர் அமைப்பிடம் மன்னிப்புக் கேட்கும் என நாம் எதிர்பார்க்கவே கூடாது.
ஐபோன்: மலேசியாவில் இந்தியர்கள் சிறுபான்மை இனம் தான். நமது முன்னோர்கள் கடுமையான உழைப்பைத் தந்துள்ள போதிலும் நாம் இன்னமும் ஒதுக்கப்பட்ட சமூகம் தான். காரணம் போதுமான வாய்ப்புக்களும் கல்வியும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஹிண்ட்ராப் தனது கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அவற்றை விற்கக் கூடாது.
இனவாத எதிர்ப்பாளன்: இது ஹிண்ட்ராப்புக்கு நல்ல செய்தியாகும். 2008 தேர்தலுக்குப் பின்னர் இந்தியர்களை அலட்சியம் செய்து வரும் பக்காத்தான் ராக்யாட் இப்போது உண்மையான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
அன்வார் இப்ராஹிம், அப்துல் ஹாடி அவாங், லிம் குவான் எங் ஆகியோர் பக்காத்தானை மலாய்/சீன கட்சியாக்கி விட்டார்கள். ஒரிரு இந்தியப் பேராளர்கள் மட்டுமே அதில் உள்ளனர். இனிமேல் அது இந்தியர்களைக் கவர புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
எது எப்படி இருந்தாலும் மலேசியாவில் ஒரங்கட்டப்பட்ட இந்தியர்களுக்கு இது இரு நிலைகளிலும் வெற்றியாகும். ஹிண்ட்ராப் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் ஆதாயமே.
நாடற்ற 450,000 இந்தியர்களுக்கும் நஜிப் குடியுரிமை கொடுத்து, ஹிண்ட்ராப்புக்கு சிறுபான்மை அமைச்சைக் கொடுத்து அந்த இயக்கத்தின் பெருந்திட்டத்தை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கினால் நாம் ஏன் பிஎன் -உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது ?
சேரிப் பையன்: 13வது தேர்தலுக்காக இந்தியர் ஆதரவைப் பெறும் பொருட்டு அரசாங்கம் சந்தர்ப்பவாத, அரசியல் விளையாட்டை நடத்துகின்றது. நீங்கள் கடுமையாகப் போராடுகின்றீர்கள். அந்தப் பிசாசுக்கு எளிதாக விட்டுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் அதனைச் செய்தால் பின்னால் வருத்தப்படுவீர்கள்.
தோலு: இந்த நாட்டில் நலிந்த நிலையில் உள்ள இந்தியர்களுடைய சமூக, பொருளாதார நிலையை உயர்த்தஉண்மையில் பாடுபடும் எந்த அரசாங்கமும் என் வாக்கைப் பெறும். ஆனால் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் உதவி பகுதி பகுதியாக துண்டு அடிப்படையில் இருக்கக் கூடாது.
மாற்றம்: இது பிஎன் -னுடைய சிந்தனையாகும். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தை அது தக்க வைத்துக் கொள்வதற்கு நீங்கள் மருட்டலாக இருந்தால் அது உங்களையும் உங்கள் அமைப்பையும் தடை செய்யும்.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உங்கள் வாக்குகள் அதற்குத் தேவைப்பட்டால் அது பின் வாங்கி தடைகளை அகற்றும். சட்டப்பூர்வமாக்கும் பத்திரங்களிலும் கையெழுத்திடும்.
ஸ்விபெண்டர்: பக்காத்தான் வடிவத்தில் மாற்று அரசாங்கம் அமையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கா விட்டால் அம்னோ ஆதிக்கம் பெற்ற அரசாங்கம் ஹிண்ட்ராப் மீதான தடையை அகற்றியிருக்காது என்பதே உண்மை.
போலியான அன்பளிப்புக்களை வழங்குவதில் அம்னோ புகழ் பெற்றது. கடந்த 40 ஆண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடங்களை நாம் மறக்கக் கூடாது.