வேதமூர்த்தி: தடையை நீக்கியது பிரதமருடனான சந்திப்புக்கு வகை செய்துள்ளது

hindrafஹிண்ட்ராப் மீதான தடை அகற்றப்பட்டுள்ளது, இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்கும் பொருட்டு பிரதமரைச் சந்திப்பதற்கான அழைப்புக்கு வழி வகுத்துள்ளது என அதன் தலைவர் பி வேதமூர்த்தி கூறுகிறார்.

“அந்த மாற்றங்களைத் தொடர்ந்து அடுத்த கட்ட முன்னேற்றத்தை விவாதிக்க ஹிண்ட்ராப் தலைமைத்துவம் அவசரமாகக் கூடும்.”

“இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணும் நோக்கத்துடன் பிரதமருடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு அந்தக் கூட்ட விவாதத்தில் முதலிடம் பெறும்.”

“கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறான திருப்பங்களை தவிர்ப்பதற்காக நாங்கள் எங்கள் கண்களையும் மனதையும் அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு இந்த எல்லா வாய்ப்புக்களையும் அணுகுவோம்,” என வேதமூர்த்தி இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

ஹிண்ட்ராப் மீது விதித்திருந்த நான்கு ஆண்டு காலத் தடையை கடந்த சனிக்கிழமை அரசாங்கம் அகற்றியது.

இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கிய பெருந்திட்டத்தை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் ஆளும் கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

TAGS: