பைபிள் எரிப்பு மருட்டலைத் தணிக்கும் பணியில் நிக் அஜிஸ்

nik“ஆணவம் பிடித்தவர்கள் நிறைந்துள்ள இந்த உலகில் நிக் அஜிஸ், மிதவாதம், அமைதி, நியாயம் ஆகியவற்றுக்கான சின்னமாகத் திகழ்கிறார்”

கிறிஸ்துவ சமூகத்துடன் தோக் குரு உறவுகளை சீர்படுத்திக் கொள்கிறார்

சுவர்க் கண்ணாடி: பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டின் துரித நடவடிக்கையாலும் பொதுவாக பக்காத்தான் ராக்யாட் நடவடிக்கையாலும் பெர்க்காசாவால்  தூண்டப்பட்டு அம்னோவின் ஆழ்ந்த அமைதியால் வேகமடைந்த தீப்பொறி அணைக்கப்பட்டு விட்டது.

பிஎன் -னும் அதன் எல்லா உறுப்புக் கட்சிகளும் சமய சகிப்புத் தன்மை சீர்குலைவதற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தன.

சமய நம்பிக்கையற்றவர்கள் பற்றிய அந்த பேராக் முப்தியின் வெள்ளிக் கிழமை தொழுகை உரை தொடக்கம் அம்னோவின் ஆழ்ந்த அமைதி உட்பட எல்லாம் ஏதாவது நிகழும் என்ற எண்ணத்துடன் நெருப்புக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தன.

நல்ல வேளையாக பக்காத்தானிலும் மலேசியர்களிடமும் நல்ல உணர்வுகள் நிலைத்திருந்தன. நிக் அஜிஸ் அவர்களே மகத்தான இந்த நாடு உங்களுக்கு நன்றி சொல்கிறது.

விஜய்47: மலேசியாவில் பல்வேறு சமயத் தலைவர்கள் சந்திப்பது வியப்பைத் தருவது மிகவும் வருத்தமளிக்கிறது. உண்மையில் அத்தகைய நிகழ்வுகள் நமது வாழ்வில் இன்னொரு நாளாக இருக்க வேண்டும்.

மற்ற சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு சவால் விடுப்பதும் வன்முறை மருட்டலை வெளியிடுவதும் இப்போது வழக்கமாகி விட்டது. அத்தகைய வன்முறை அறைகூவலை விடுப்பது சமயத் தலைவர்களாக இருப்பது மேலும் கவலை அளிக்கிறது.

ஆணவம் பிடித்தவர்கள் நிறைந்துள்ள இந்த உலகில் நிக் அஜிஸ், மிதவாதம், அமைதி, நியாயம் ஆகியவற்றுக்கான சின்னமாகத் திகழ்கிறார்.

80 வயதைத் தாண்டி விட்ட பலவீனமாக உள்ள அந்த மனிதர் தமது சமயத்திலிருந்து மாறுபட்ட மற்ற சமய மக்களை அமைதியாக சந்தித்து உரையாடுகிறார். மன உளைச்சலையும் அச்சத்தையும் தரும் இந்த நாளில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்கிறார்.

அவருடைய கண்ணோட்டத்தை மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளாதது உண்மையில் வருத்தத்தைத் தருகிறது.

மூன் டைம்: அந்த முதிய மனிதர் மற்ற சமய மக்களுக்கு நட்புறவுக் கரங்களை நீட்டி புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு தாம் ஒரு நல்ல முஸ்லிம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். தோக் குரு பரந்த சிந்தனையுள்ள மனிதர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டுடன் ஒப்பிடுகையில் நிக் அஜிஸ் பெரிதும் மாறுபட்டவர். மகாதீர் பழி வாங்கும் எண்ணத்தையும் தன்மூப்பான போக்கையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்தார்.

தேகாசாப்பி: உண்மையான தலைமைத்துவத்தை நீங்கள் இங்கு காணலாம். நேசம், ஒற்றுமை ஆகிய உணர்வுகள் அடிப்படையில் நாம் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியாவின் எதிர்காலம் பற்றி நாம் தான் கவலைப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தானே பக்காத்தான் கோட்பாடு.

அடையாளம் இல்லாதவன்_3e21: உண்மையான முயற்சி நீண்ட கால நன்மையைக் கொண்டிருக்கும்.

‘பிரித்தாளும்’ கொள்கையை இந்த ஆட்சி பின்பற்றுவதை மக்கள் உணர வேண்டும். பாசத்துக்குரிய நமது நாட்டை மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

புரோர்ட்: கிறிஸ்துவர்கள் பாஸ் கட்சியைக் குறிப்பாக நிக் அஜிஸை புகழுவதற்கு முன்னர் சிந்திக்க வேண்டும்.மலாய் பைபிளில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கும் பக்காத்தான் இணக்கத்தைத்  தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தாரா ?

அதற்கான பதில் ‘ஆம்’ என்றால் மலாய் பைபிளில் அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தக் கூடாது என பாஸ் Syura மன்றம் ஏகமனதாக எடுத்த முடிவை அவர் ஏன் அங்கீகரித்தார் ?

இந்த விஷயத்தில் பாஸ் இரட்டை வேடம் போடுகின்றது. அதனை நம்ப முடியாது. அதனால் இஸ்லாம்  ர்பில்

அது பேசக் கூடாது.  மலாய் பைபிளில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கும் பக்காத்தான் இணக்கத்தை ஒப்புக் கொள்ளாத எந்த பாஸ் வேட்பாளருக்கும் கிறிஸ்துவர்கள் வாக்களிக்கக் கூடாது.

ஜெரார்ட் லூர்துசாமி: இரு தரப்பும் தங்கள் நிலையை வெளிப்படுத்தி விட்டன. அது அப்படியே இருக்கட்டும். அந்தப் பிரச்னை மீது கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு நடப்பு நிலை தொடரட்டும். கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொண்டது போல கிழக்கு மலேசியர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு அல்கித்தாப்பை பயன்படுத்த முடியும். நல்லெண்ண அடையாளமாக பாஸ்  Syura மன்றம் தேவாலயத் தலைவர்களைச் சந்தித்து நிரந்தரத் தீர்வு காண முயல வேண்டும்.

பிகேஆர், டிஏபி ஆகியவற்றுடன் பாஸ் இணங்கிப் போகாத சில விஷயங்களில் ‘அல்லாஹ்’ விவகாரமும் ஒன்றாகும். நாட்டின் எதிர்காலம் சார்ந்துள்ள முக்கியமான பிரச்னை அல்ல அது.

ஜனநாயகம், நீதி, சட்ட ஆட்சி, சுதந்திரம், நியாயம், சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான போராட்டம் தொடர வேண்டும். எதிரி அம்னோ/பிஎன் ஆகும் முஸ்லிம்களோ கிறிஸ்துவர்களோ அல்ல.

மஹாஷித்லா: தோக் குரு-வின் கனிவான போக்கு பினாங்கு மக்களை மட்டுமின்றி மலேசியர்களுடைய குறிப்பாக அண்மைய காலத்தில் அதிக மனை உளைச்சலுக்கு இலக்காகியுள்ள கிறிஸ்துவர்களுடைய உள்ளத்தைத் தொட்டு விட்டது.

அடையாளம் இல்லாதவன்#29641466: எல்லா திசைகளிலிருந்தும் மாற்றத்துக்கான காற்று வீசுவதால் அம்னோவும் அதன் பிஎன் பங்காளிகளும் அச்சமடைந்து பதறிப் போயிருக்கின்றன.

 

TAGS: