புங்கோல் கிழக்கு முடிவு தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றது

lion“சிங்கப்பூர், மலேசிய மக்கள் தீவிரமான சீர்திருத்தங்களை நாடுகின்றனர். இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, இளைஞர்கள் பொறுமை இழந்துள்ளனர். சின்னஞ்சிறு அடிகள் போதாது”

புங்கோல் கிழக்கு தொகுதியில் பிஏபி தோல்வி தரும் பாடங்கள்

அடையாளம் இல்லாதவன்: டாக்டர் பிரிட்ஜெட் வெல்ஷ் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மலேசியாவில் செய்வதைப் போன்று சிறிய ரொக்கத் தொகைகளைக் கொடுத்து வாக்காளர்களை வாங்க முடியாது.

சிங்கப்பூர், மலேசிய மக்கள் தீவிரமான சீர்திருத்தங்களை நாடுகின்றனர். இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, இளைஞர்கள் பொறுமை இழந்துள்ளனர். சின்னஞ்சிறு அடிகள் போதாது.

இன்னொரு முக்கியமான விஷயம், மிட் ரோம்னியை பாராக் ஒபாமா தோற்கடித்ததாகும். ஒபாமா 10 டாலர் போன்ற நன்கொடைகளைச் சார்ந்திருந்தார். ஆனால் ரோம்னி பெரிய செல்வந்தர்கள் வழங்கிய பெரிய நன்கொடைகளை நம்பியிருந்தார்.

அந்த செல்வந்தர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன ? ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே உள்ளது. சிறிய நன்கொடையாளர்களிடம் எத்தனை வாக்குகள் உள்ளன ?

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பிஎன் -னை ஆதரிக்குமாறு பணக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையில் அவர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன ?

Ex-Wfw: உண்மையில் ஒப்பு நோக்க முடியாது என்றாலும் அந்த ஆய்வு ஆர்வத்தைத் தூண்டுகின்றது. சிங்கப்பூர்  மக்கள் இன்றைய நிலையிலிருந்து மாறுபட்ட ஒன்றை நாடுகின்றனர். ஆனால் இங்கு மக்கள் அத்துமீறல்களை போதுமான அளவுக்குப் பார்த்து விட்டதால் மாற்றத்தை விரும்புகின்றனர்.

கேகன்:  டாக்டர் வெல்ஷ் சுட்டிக் காட்டியுள்ளது போல சிங்கப்பூரர்கள் பொருள் வளப்பத்தையே நாடுகின்றனர் என எண்ணுவது தவறாகும்.

சிவில் உரிமைகள் குறைவாக இருப்பதற்கும் ஜனநாயகத்துக்கு இடம் இல்லாமல் இருப்பதும் வளப்பமான வாழ்வு மாற்றாக இருக்க முடியாது. பிஏபி அரசாங்கத்தின் விரிவான கட்டுப்பாடுகள் ஒடுக்குமுறையாகத் தெரிவதால் பல சிங்கப்பூரர்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்னைகள், வாக்காளர் உணர்வுகள் அடிப்படையில் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் அல்லது பிஎன் வெற்றி பெறும் என டாக்டர் வெல்ஷ் ஆய்வு செய்ய வேண்டும்.

பிஎன் பெரிய அளவில் மோசடியில் ஈடுபடும் என்பதால் உண்மையான ஆய்வு வீண் முயற்சி என்றாலும் குறைந்த பட்ச மோசடியுடன் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை நாம் அறிய முடியும்.

உங்கள் அடிச்சுவட்டில்: இரண்டு நாடுகள் கதை இது. சிங்கப்பூரை உருமாற்றுவதில் பிஏபி அதிக வெற்றியை அடைந்ததால் அதன் செல்வாக்கு குறைகிறது. அம்னோ எதனையும் சரியாகச் செய்யாத கோமாளியாக இருப்பதால் அதன் செல்வாக்கு சரிகிறது.

நல்ல நாள்: அந்த ஆய்வைப் படிக்கும் போது 13வது பொதுத் தேர்தலில் மலேசியாவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

2008 மார்ச் மாதத்துக்கு பின்னர் அம்னோபுத்ராக்கள் “கணிசமான மாற்றங்களைச் செய்யத் தயாராக இல்லை” என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் தெளிவாகி விட்டது.

சுதந்திரமான, ஜனநாயக, சிவில் சமூகத்தை நோக்கி எந்த மாற்றத்தையும் செய்யாமல் மக்களுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்தால் போது ஆட்சியில் தொடரலாம் என அவர்கள் எண்ணுகின்றனர்.

நியாயமானவன்: நல்ல ஆய்வு. ஆனால் பிஎன் -னுக்கு கால தாமதமாகி விட்டது. மக்கள் எதிர்பார்ப்பதை கொடுக்க விரும்பினால் பக்காத்தான் அதற்கு செவி சாய்க்க வேண்டும்.

OMG!!: பிஏபி-யையும் அம்னோ-வையும் ஒப்பு நோக்கவே கூடாது. பிஏபி மாற்றத்தைச் செய்ய தயாராகஉள்ளது. ஆனால் அம்னோ அப்படி அல்ல.

அத்துடன் அம்னோ மோசடிகள் மூலம் அதிகாரத்தில் நிலைத்திருக்க முயலும். மகாதீர் திட்டம் 2.

கலா: அந்த ஆய்வில் ஒரு விஷயம் சொல்லப்படவில்லை. பழைய வழிமுறைகள் இன்னும் பலன் தரும் எனபிஏபி ( அது அம்னோவுக்கும் பொருந்தும் ) நம்புவதாகும்.

நன்கு தேர்ச்சி பெற்ற சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்ததின் மூலம் வாக்காளர்களின் தேவையைப் பூர்த்தி செய்து விட்டதாக பிஏபி கருதியது. சிங்கப்பூருக்கு வெற்றியைக் கொண்டு வர அது தான் வழி என அது எண்ணியது.

பெரும்பான்மை வாக்காளர்கள் அந்த நியாயத்தை ஏற்கவில்லை. நிபுணத்துவம் அரசியலுக்குச் சிறந்த தரமாக இனிமேல் இருக்க முடியாது. இப்போது மக்கள் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

 

TAGS: