வெளிநாடு வாழ் மலேசியர்களின் ‘Jom Balik Undi’ இயக்கம்

1campaignவெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், சக மலேசியர்கள் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் அதன்வழி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

1campaign2அவ்வியக்கம்  ‘Jom Balik Undi’ (நாடு திரும்பி வாக்களிப்போம்) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தொடக்கிய ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வில்லியம் டி குருஸ், ஏட்ரியன் லியோங் ஆகிய இருவரும் எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும் என்றனர்.

“புதியதொரு மலேசியா உருவாகும் வாய்ப்பு முன் எப்போதையும்விட இப்போது அதிகம் உள்ளது. எவ்வொரு வாக்கும் முக்கியமானது.

“13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் வெளிநாட்டில் உள்ள மலேசியர்களும் முக்கிய பங்காற்ற முடியும்.

“மலேசிய மண்ணில் மிக அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு எல்லோரும் ஒன்றுதிரண்டு  வாக்களிக்க வேண்டும்.

“இப்படிச் செய்வதால் வாக்களிப்பு நாளில் தேர்தல் மோசடிகள் நிகழ்வதைக் குறைக்க முடியும்”, என்று அவர்களின் அறிக்கை கூறியது. அது, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் வாக்களிக்க நாடு திரும்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

நாடு திரும்புவதை ஊக்குவிக்கும் முயற்சி

இதன் தொடர்பில், முகநூல் பக்கமொன்றையும் தொடங்கியுள்ளனர். www.facebook.com/JomBalikUndiMalaysia

1campaign 4“ஜேபியு இயக்கம், வாய்ப்பு வசதி இருந்தால் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் என வெளிநாடுவாழ் மலேசியர்களை வலியுறுத்துகிறது. நாடு திரும்ப முடியாத வாக்காளர்கள் தங்களை அஞ்சல் வாக்காளர்களாக பதிந்துகொள்ள வேண்டும். அதை இயன்ற விரைவில் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்”.

வெளிநாட்டில் உள்ள மற்ற மலேசியர்களும் இவ்வியக்கத்தில் பங்குபெறுவதை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

இவ்வியக்கத்தை விவரிக்கும் செய்திகளை வெளிநாடுகளில் உள்ள பல மலேசியர்களுக்கும் அவர்கள் அனுப்பி வைக்த்துள்ளனர்.

இது தவிர, சிட்னி நகரில் மலேசிய அரசியல் விமர்சகர்கள் கலந்துகொள்ளும்  பொதுக் கருத்தரங்கு ஒன்றுக்கும் ஜேபியு ஏற்படு செய்யும். அதில் பல்வேறு ஆவணப் படங்களும் திரையிடப்படும்.

TAGS: