“13வது பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு குறுகிய காலமே இருக்கும் வேளையில் பெரிய அளவிலான அந்த மோசடியை சரி செய்ய முடியும் என நான் எண்ணவில்லை”
“லண்டனில் இருக்கும் என் புதல்வி சிலாங்கூரில் அவர் ஒரு வாக்காளர் என்கிறார் துணை முதலமைச்சர்”
சுவர்க் கண்ணாடி: மோசடிகள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரச்னை ஆழமாக வேரூன்றியுள்ளது. தீவகற்ப மலேசியா முழுவதும் அது பரவியுள்ளது. அதனால் 13வது பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு குறுகிய காலமே இருக்கும் வேளையில் பெரிய அளவிலான அந்த மோசடியை சரி செய்ய முடியும் என நான் எண்ணவில்லை.
தேர்தால் ஆணையம் எதனையும் நிச்சயம் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு ‘பொருத்தமில்லாத’ வழிகளை அது தேடுவது திண்ணம்.
அடையாளம் இல்லாதவன் #67264380: நான் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். வெளிநாட்டில் படிக்கும் என் புதல்வியும் வாக்காளராகப் பதிந்து கொள்ளவே இல்லை. யாராவது தேர்தல் ஆணையம் மீது வழக்குப் போடுகின்றார்களா ? நானும் அவர்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.
அடையாளம் இல்லாதவன் #15315623: நியூசிலாந்தில் படித்துக் கொண்டிருக்கும் என் புதல்விக்கும் பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் நிச்சயம் வாக்காளராகப் பதிந்து கொள்ளவில்லை. காரணம் அவர் 21 வயதாகிய போது அவர் மலேசியாவில் இல்லை. அவர் நாட்டுக்குத் திரும்பவே இல்லை.
உங்கள் அடிச்சுவட்டில்: நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து கடிதம் வருவதும் இசி-யில் வாக்காளராக ஒருவர் பதிந்து கொள்வதும் வேறு வேறு விஷயங்களாகும்.
என்றாலும் நஜிப்பின் கடிதம் கிடைத்தவர்கள் வாக்காளர்கள் எனக் கருதுவது நியாயமே. எனினும் அவர்கள் பதிந்து கொண்டுள்ளார்களா என்பதை முதலில் இசி இணையத் தளத்தில் சரி பார்ப்பது நல்லது.
அடையாளம் இல்லாதவன் #10786680: இந்தச் செய்தியைப் படித்த பின்னர் பாதிரியாரான என் நண்பர் ஒருவர், வாக்காளராகப் பதிந்து கொள்ளாத தமது சகோதரருடைய நிலையை அறிந்து கொள்ள இணையத் தளத்தில் சோதனை செய்தார். செமினியில் அவர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சிலாங்கூரை எப்படியும் பிடிப்பது என பிஎன் கங்கணம் காட்டிக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
அடையாளம் இல்லாதவன்_3e86: 2008 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே இத்தகைய சட்டவிரோத பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இஏடி: இந்த மோசடிக்குச் சட்ட ரீதியில் தீர்வு காண வழி ஏதும் உள்ளதா ? வெளிநாட்டுகளில் கல்வி கற்கும் தங்கள் பிள்ளைகள் தங்களுக்குத் தெரியாமல் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பலர் கூறிக் கொண்டுள்ளனர். இசி அது குறித்து எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அவர்கள் அந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வர நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு செல்ல முடியுமா ?
கிரிஸ்மான்: பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமிக்கு அந்த விவரம் தெரியாது இருந்தால் அவரது 25 வயது புதல்வி ஸ்ரீ வைதேகி பிஎன் -னுக்கு ‘வாக்களித்திருப்பார்’.