‘புத்ராஜெயா சபாஷ் பேரத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது’

syabasசபாஷ் நிறுவனத்தில் புத்ராஜெயாவுக்கு “பொன்னான பங்குகள்” இருப்பதால் சிலாங்கூர் அரசாங்கம் அதனை சபாஷ் நிறுவனத்தை எடுத்துக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது அல்லது மாநிலத்தை அலைக்கழிக்கிறது என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நிறுவனத்தில் பெரும்பங்கு புத்ராஜெயாவிடம் இருப்பதால் அதனை எடுத்துக் கொள்வது மீது தமது நிர்வாகம் கூட்டரசு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

“மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் தனது பங்கை நிதி அமைச்சு விற்பதற்குத் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதை கூட்டரசு அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் எரிசக்தி, தொலைத் தொடர்பு, நீர்வள அமைச்சர் பீட்டர் சென் கடிதம் மூலம் விளக்க வேண்டும்.”

“அவர் அதனைச் செய்யவில்லை என்றால் நீர்வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்யும் நடவடிக்கைகளை அமலாக்க முடியாது,” என்றும் காலித் தெரிவித்தார்.

“எவ்வளவு ( offer ) என்பதை தெரிவிக்குமாறு Syabas என்ற Syarikat Bekalan Air Selangor மாநில அரசாங்கம் அணுகியது. ஆனால் அந்த பேரத்தை நிதி அமைச்சு அங்கீகரிக்கவில்லை என அது எங்களுக்குத் தெரிவித்து விட்டது.”

சிலாங்கூரில் நீர் வள நிறுவனங்களை எடுத்துக் கொள்ளும் மாநில அரசாங்க நடவடிக்கையில் கூட்டரசு அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்றும் அதனால் அது அந்த நீர் வள நிறுவனங்களிடம் பேச்சு நடத்த வேண்டும் என்றும் சின் கடந்த வாரம் விடுத்த அறிக்கை மீது காலித் கருத்துரைத்தார்.

நீர் விநியோகத்தை மறுசீரமைப்புச் செய்ய மாநில அரசாங்கம் விரும்புவதின் நோக்கம் தண்ணீர் கட்டணங்களை உயர்த்துவது அல்ல என்றும் அதிகரிக்கும் செலவுகள் மக்களுக்குச் சுமையாகி விடுவதைத் தடுப்பதே நோக்கம் என்றும் மந்திரி புசார் சொன்னார்.

 

TAGS: