லண்டன் : குழந்தை பருவம் மகிழ்ச்சியாக அமையாதவர்களுக்கு, நடுத்தர வயதில் இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு அவர்கள் நடுத்தர வயதாகும் போது இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏழு வயதில், அதிகமான மனச்சுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு, அவர்களின் நடுத்தர வயதில், இதயநோய் வருவதற்கு, 31 விழுக்காடு வாய்ப்பு உள்ளது என்கிறது அந்த ஆய்வு. அதே சமயம், ஆண்களுக்கு, 17 விழுக்காடே வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“குழந்தை பருவத்தில், நல்ல கவனிப்பும், மகிழ்ச்சியான சூழலும் அமைபவர்களுக்கு, இதயநோய் வர வாய்ப்பு குறைவு” என்கிறது இந்த ஆய்வு.