பங்களாதேஷ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

qader_mollahபங்களாதேஷின் பிரதான இஸ்லாமியக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் , பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற , 40 ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் விடுதலைப் போர் நடந்த கால கட்டத்தில், இழைக்கப்பட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதற்காக , சிறப்பு போர்க்குற்றங்கள் தீர்ப்பாயம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

ஜமாத் இ இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த அப்துல் காதர் முல்லா நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டார்.

நீதிபதிகள் இது குறித்து தங்களது தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும்போது, அப்துல் காதர் முல்லா அவர்களை நோக்கி உரத்த குரலில் திட்டினார்.

அவரது கட்சி நாட்டில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்திருக்கிறது.

தலைநகர் டாக்காவில் பள்ளிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. போலிசார், வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களுடன் மோதினர்.

1971ல் நடந்த போரின் போது, சுமார் முப்பது லட்சம் பங்களேதேஷ் மக்கள் கொல்லப்பட்ட்னார். இந்தப் போர், வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய வழிவகுத்தது.

-BBC