சுனாமியால் சாலமன் தீவில் ஐந்து கிராமங்களை காணோம்

Tsunami damage in Temotu province of the Solomon Islandsசிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன.

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. 100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.

இந்த பூகம்பத்தை தொடர்ந்து, சுனாமி ஏற்பட்டது. 5 அடி உயரம் கொண்ட, கடல் அலைகள் தீவுகளை தாக்கின.இந்த பூகம்பத்தினால், சான்டாகுருஸ் தீவில் உள்ள ஐந்து கிராமங்கள் அழிந்தன. இதுவரை, ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் ஏராளமான மக்கள் மலை பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 5.2 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் துறை அறிவித்தது. என்றாலும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோன்று சாந்தா குரூஸ் தீவுகளில் நேற்று முன்தினம் இரவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.