ஜோகூர் கேலாங் பாத்தா டிஏபி வேட்பாளராக லியு சின் தொங்

1pkrஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு என்பதில் பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் தகராறு நிலவினாலும் டிஏபி, மசீசவின் கோட்டையாக திகழும் அத்தொகுதியில் போட்டியிட புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தொங்கின் பெயரைப் பரிந்துரைத்துள்ளது.

1pkr 1 tanலியுதான் அத்தொகுதியில் போட்டியிட மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று டிஏபி துணைத் தலைவர் டான் கொக் வாய்(வலம்) கூறினார்.

“ஆம். கேலாங் பாத்தாவில் போட்டியிட சின் தொங்கைத்தான் பரிந்துரைத்துள்ளோம்”, என்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது டான் தெரிவித்தார்.

லியு, ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆசியக் கல்வியில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.முதல்-தவணை எம்பியான அவர், பாஸ் அரசியல் பற்றி நன்கு அறிந்தவராகக் கருதப்படுகிறார்.

2008 பொதுத் தேர்தலுக்குமுன் அவரை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தம் தேர்தல் வியூக ஆலோசகராக அமர்த்தினார். பின்னர், அவர் புக்கிட் பெண்டேரா எம்பி-ஆகவும் ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனதும் பினாங்கு முதலமைச்சரின் கொள்கை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

லியு, சமூக மேம்பாட்டு ஆய்வு, பினாங்கு கழகம் உள்பட பல சிந்தனைக் குழுக்களுக்குத் தலைவராக இருந்துள்ளார்.

1pkr 2liewலியு (இடம்) ஜோகூர் வேட்பாளராகலாம் என்ற செய்தியை முதலில் தெரிவித்தவர் ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்.

“லியு துடிப்புமிக்க இளம் கொள்கை வகுப்பாளர். அவருக்கு ஜோகூர் கேலாங் பாத்தாவில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்”, என்று பூ தம் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

பக்காத்தான் ஜோகூரைக் கைப்பற்றினால், மாநில அரசுக்கு நல்லதோர் ஆலோசகராக விளங்குவார் என்று பூ கூறினார்.

“அதனால்தான் அவர் கேலாங் பாத்தாவில் போட்டியிடுவதை வரவேற்கிறோம்”, என்றாரவர்.

இதனிடையே,மலேசியாகினி பாகாங், பெந்தோங்கில் ஒரு செராமாவில் லியு-வைச் சந்தித்து வினவியபோது அவர் கருத்துரைக்க மறுத்தார்.

1pkr dr booமலேசியாவில் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கேலாங் பாத்தா. அங்கு 100,000-த்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

அதனுள் இரண்டு சட்டமன்ற இடங்கள்-ஸ்கூடாய், நூசாஜெயா- அடக்கம்.ஸ்கூடாயை பூ (இடம்) வைத்துள்ளார். பின்னது அம்னோவின் அப்துல் அசீஸ் சபியான் கைவசம் உள்ளது.

2008-இல், அங்கிருந்த வாக்காளர்களில் 54.3 விழுக்காட்டினர் சீனர்கள், 33.85 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 11.7 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

ஜோகூரில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளில் அதுவும் ஒன்று.

 

TAGS: