பெர்சே vs என்எஸ்டி வழக்கு : முக்கிய நாளேடுகளை நாம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்

NSTஉண்மையில்லாத விஷயங்களும் அப்பட்டமான பொய்களும் நிறைந்த கறை படிந்த ஊழல் மலிந்த அந்த ஊடகங்களை தூய்மைப்படுத்த நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்”

என்எஸ்டி-க்கு எதிராக பெர்சே அவதூறு வழக்கு தொடர்ந்தது

சராஜுன் ஹுடா: நம்ப முடியாத அளவுக்கு பொறுப்பற்ற இதழியலுக்கு அது இன்னொரு உதாரணம். அந்த முக்கிய நாளேடுகளின் இதழியல் தரம் மிகவும் மோசமான அளவுக்குத் தாழ்ந்து விட்டதா ?

அவை அநீதி இழைத்துள்ள பலர் அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீட்டையும் அவை கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தும் அவை வதந்திகளைப் பரப்புவதையும் அவதுறுகளைச் சொல்வதையும் தொடருகின்றன.

மக்கள் ‘நம்பிக்கையை’ பெறுவதற்கு பிஎன் பின்பற்றும் வழி இது தானா ? அவற்றுக்கு வெட்கமே இல்லையா ?

பிஎன் அரசாங்கத்தின் நிலை இது தானா ? இருந்தும் ஆட்சி புரிய தங்களுக்கு இன்னொரு தவணைக்கு அதிகாரம் அளிக்குமாறு மக்களை அது கேட்டுக் கொள்கிறது.

முட்டாள்களே அதனை நம்புவர். அதற்கு வாக்களிப்பர்.

பிஜான்: உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகியவை இழப்பீடுகளைக் கொடுப்பது பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அவை அம்னோ/பிஎன் -னுக்குச் சொந்தமானவை.  அவை நிச்சயமாக பெரிய பணக்காரப் பத்திரிக்கைகள்.

அவ்வப்போது அந்த முக்கிய நாளேடுகள் பொய்களை ஜோடித்து வெளியிட்டு வருகின்றன. அவற்றுக்கு எதிராக பல அவதூறு வழக்குகளும் நடைபெற்றுள்ளன. அவற்றுக்கு ஏன் உள்துறை அமைச்சர் இன்னும் அனுமதி கொடுக்கிறார் ?

சண்டை: பெர்சே எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்க நான் தயார்.

தேஹாசாப்பி: அடிப்படை மனித உரிமைகள், உண்மை, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் டித்தளத்தை மீண்டும் நிர்மாணிக்கும் அரசு சாரா அமைப்புக்களும் சரியான சிந்தனையைக் கொண்ட குடிமக்களும் இணைந்து பாடுபடுவது பெருமையாக உள்ளது.

நாம் நீண்ட காலம் ஏமாற்றப்பட்டுள்ளோம். பொய்கள்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை நிற்க வேண்டும்.

உண்மையில்லாத விஷயங்களும் அப்பட்டமான பொய்களும் நிறைந்த கறை படிந்த ஊழல் மலிந்த அந்த ஊடகங்களை தூய்மைப்படுத்த நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்.

பாரபட்சம் காட்டாத பத்திரிக்கையாளர்கள் உண்மையான செய்திகளை வெளியிட்டு சுதந்திரமான ஊடகத் துறை இருக்கும் போது தான் தூய்மையான பொறுப்புள்ள அரசாங்கத்தை காண முடியும்.

நாகரீகமான சமூகத்தில் பொது மக்களுடைய மனசாட்சியாக காவலனாக ஊடகங்கள் திகழ வேண்டும். சொந்த நோக்கத்திற்காக ஊடகங்களில் தில்லுமுல்லு செய்வதும் உண்மைகளை மறைப்பதும் குற்றமாகும்.

அடையாளம் இல்லாதவன்#21828131: கதைகளை ஜோடித்ததாக அவற்றின் மீது வழக்குப் போடுங்கள். நீங்கள்நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என எங்களுக்குத் தெரியும்.

Cogito Ergo Sum: தொழில் நெறிமுறைகள், உள்ளடக்கம், தெளிவான எழுத்துக்கள் ஆகியவற்றுடன் 1960களிலும் 1970 களிலும் மரியாதைக்குரிய ஏடாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் திகழ்ந்தது. ஆனால் இப்போது அந்த மரியாதையை இழந்து விட்டது.

அடையாளம் இல்லாதவன்_3ec6: ஆமாம், அந்த என்எஸ்டி (Non-Speaking Truth) மீது அது கடைசி சென்னையும் இழக்கும் வரை வழக்குப் போடுங்கள்

TAGS: