பிகேஆர்: நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அமாலிலியோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்

amalilioபிலிப்பின்ஸில் குற்றச் செயல் ஒன்றுக்காக தேடப்பட்டு வந்த மானுவல் அமாலிலியோ பிலிப்பீன்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்குச் “சௌகரியமாக” மலேசிய அதிகாரிகள் அவரை கோத்தா கினாபாலு மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைத்ததாக பிகேஆர் இன்று கூறியது.

பிலிப்பின்ஸில் அமாலிலியோவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பிகேஆர் குழு ஒன்று அங்கு சென்றிருந்த போது அந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டதுடன் பல கேள்விகளும் எழுப்பப்பட்டன.

“அமாலிலியோ சபா மருத்துவமனை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் ஒருவர் தண்டனை விதித்துள்ளது முறை ஏமாற்று வேலையாக உள்ளது,” என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொன்னார்.

பிப்ரவரி ஐந்தாம் தேதி நடந்த அந்த விசாரணையில் மாஜிஸ்திரேட், அரசு தரப்பு வழக்குரைஞர்கள், அமாலிலியோ வழக்குரைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்ட முறை குறித்தும் அந்த வழக்கு தொடர்பான எல்லா விவரங்களும் சௌகரியம் போல தயாரிக்கப்பட்டது குறித்தும் பிகேஆர் சுபாங் எம்பி-யும் வழக்குரைஞருமான சிவராசா ராசைய்யா கேள்வி எழுப்பினார்.

“அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது,” என சிவராசா சொன்னார்.

அமாலிலியோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நம்ப முடியாமல் இருப்பதால் அந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிலிப்பின்ஸ் அதிகாரிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த முழு விவகாரத்திலும் குளறுபடிகள் இருப்பதாகத் தோன்றுகிறது என்றார் அவர்.amalilio1

பிலிப்பீன்ஸில் அமாலிலியோ நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரமிட் திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட பணம் சபா தேர்தலுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளதாக தியான் சுவா சொன்னார்.

“அமாலிலியோவின் நெருங்கிய உறவினரும் சபா முதலமைச்சருமான மூசா அமான், மலேசிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த விவகாரத்தில் உயர் நிலையில் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.”

“பிலிப்பீன்ஸில் பெரிய அளவில் குற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் அமாலிலியோவை மலேசியாவில் வைத்திருக்கக் கூடாது,” என தியான் சுவா மேலும் கூறினார்.

 

TAGS: