‘டாக்டர் மகாதீருடைய குடியுரிமையே பறிக்கப்பட வேண்டும்’

maha“அடையாளக் கார்டு திட்டம் பெரிய தேசத் துரோகமாகும். சட்டம் இரு பக்கமும் கூர்மையுள்ளது என்பதை அந்த முன்னாள் பிரதமர் மறந்து விட்டார்”

டாக்டர் மகாதீர்: அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்துங்கள்

ஈப்போ2: ஒருவருடைய பிறப்புரிமையான குடியுரிமையை உலகில் எந்த நாடாவது பறித்தது உண்டா ? குடியேற்றக்காரருக்கு பிரஜாவுரிமை கொடுக்கப்பட்டிருந்தால் அதனை வேண்டுமானால் பறிக்கலாம். ஆனால் பிறப்பால் குடியுரிமை பெற்றவருடைய குடியுரிமையை நிச்சயம் பறிக்க முடியாது.

அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு சொல்வதே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தீய எண்ணமும் பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றது.

நல்ல மனிதர்கள்: “சரி, சரி, சரி” விவகாரம் போன்ற நீதிபதிகள் நியமனத்தை நிர்ணயிக்கும் விஷயங்கள் தொட முடியாதவையாக இருக்கும் போது நடப்பு அரசாங்கத்தின் முறைகேடான காரியங்களை எதிர்க்கும் ஒருவர் ‘தவறு செய்யும் வழக்குரைஞராகி’ அவருடைய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

குடியுரிமை பறிக்கப்பட வேண்டிய மனிதர்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதற்காக தகுதி பெறாத சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்க தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்களுடைய பிரஜாவிரிமையே பறிக்கப்பட வேண்டும். அவர்களே உண்மையான தேசத் துரோகிகள்.

மலேசியாவாட்ச்4: மகாதீர் அவர்களே யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட வேண்டுமானால் பெரிய தேசத் துரோகமான அடையாளக் கார்டு திட்டத்துக்காக உங்கள் பிரஜாவுரிமையே முதலில் பறிக்கப்பட வேண்டும்.

அடுத்த அரசாங்கம் நீதிமன்றத்தில் உங்கள் நிறுத்த விரும்பா விட்டால் அதனைச் செய்ய வேண்டும்.

குடிமகன்_1b85: உங்கள் புதல்வி மரினா பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனைப் பற்றி அதே கருத்துக்களைக் கொண்டுள்ளாரா ?

இல்லை என்றால் உங்கள் புதல்வியின் குடியுரிமையையும் நீங்கள் பறிக்க வேண்டும். காரணம் அவர் கலவரத்தை தூண்டுகின்றவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். நீங்கள் இப்போது உண்மையில் மிக மிக மிக அச்சமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஹெர்மிட்: மகாதீர் தமது அரசியல் உயிர்வாழ்வுக்காக குடியுரிமைகளை விற்றுள்ளதின் மூலம் பெரிய தேசத் துரோகத்தைச் செய்துள்ளார். ஆனால் சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கின்றவர்களுடைய பிரஜாவுரிமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் கோருகிறார். அவர் உண்மையில் ஒரு பிசாசு தான்.

பல இனம்: அம்பிகா கௌரவமான பிரஜை. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களைக் கோரும் புனிதமான ஒருபோராட்டத்துக்காக அவர் தமது நேரத்தைத் தியாகம் செய்துள்ளார். அதற்கு மாறாக மகாதீர் தமது ஆட்சிக் காலத்தில் இன, சமய அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியுள்ளார்.

அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக குடியுரிமையை வழங்கிய தேசத் துரோக நடவடிக்கைக்குத் திட்டமிட்டவரே அவர் தான் இப்போது தெளிவாகியுள்ளது.

அம்பிகா அல்லது மகாதீர் இதில் யாருடைய பிரஜாவுரிமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் நீங்கள் யாரைத் தேர்வு செய்வீர்கள்.

இறைவன், வரும் தேர்தலில் எல்லா மலேசியர்களும் சரியான முடிவை எடுப்பதற்கு வழி காட்டி இந்த நாட்டை ஆசீர்வதிக்க வேண்டும்.

பிராமண்: சுதந்திரமான நியாயமான தேர்தல்களைக் கோரியதால் அம்பிகா என்ன தவறு செய்து விட்டார் ? அது குற்றம் எனக் கருதி அம்பிகாவின்  பிரஜாவுரிமையைப் பறிக்க யோசனை கூறும்   மகாதீருக்கு தமது  குடும்ப உறுப்பினர்களும் சேவகர்களும் நாட்டைக் கொள்ளையடிக்க அனுமதித்ததற்கும் வாக்குகளுக்காக குடியுரிமை கொடுத்ததற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் ?

மலேசியாவில் இன்னும் மரண தண்டனை நடப்பில் உள்ளது. அத்தகைய குற்றங்களுக்கு அது பொருந்துமா ?

தே தாரேக்: இந்தியர்கள் ஏன் பிஎன் -னுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்கு இது இன்னொரு காரணம். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கப் போவதாக மருட்டியதின் மூலம் அவர் இந்தியர்களையே அவமானப்படுத்தியுள்ளார்.

நியாயத்துக்கும் நீதிக்கும் போராடுகின்றவர்கள் மீது அவர் தொடர்ந்து இத்தகைய மருட்டல்களை விடுக்கட்டும்.

மகாதீர் விடுத்துள்ள அறிக்கைகள் போன்றவை பக்காத்தான் ராக்யாட்டுக்கு நன்மையைக் கொண்டு வரும்.  அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் பிஎன் வாக்குகளை இழக்கும்.

மகாதீருக்கும் அவருடைய ஆதரவாளரான பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்கும் வாழ்த்துக்கள்.

ஆ பாஸ்: சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கும் தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கும் குடியுரிமை வழங்கி திடீர் பூமிபுத்ராக்களை உருவாக்கிய எல்லா மலேசியர்களுக்கும் துரோகம் செய்த மகாதீருடைய குடியுரிமையே ரத்துச் செய்யப்பட வேண்டும்.

இப்போது அந்த ‘உண்மையான’ மலாய்க்காரர்கள் பூமிபுத்ரா கேக்கை மூன்று அல்லது நான்கு மில்லியன் பேர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 

TAGS: