தமிழர் இனப்படுகொலையை கண்டும் காணமலிருந்த ஐ.நாவுக்கு கண்டன மனு!

vanni_Tamil-childஇலங்கையில் தமிழர்  இனப்படுகொலை செய்யப்பட்டபோது செயல்பட்ட ஐக்கிய நாட்டுச் சபையினர் அதனை கண்டும் காணாமல் நடந்து கொண்டதாக அண்மையில் வெளியான அச்சபையின் அறிக்கையே கூறுகிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நா செயல்பட்டதை கண்டனம் செய்யும் வகையில் வரும் புதன்கிழமை 13.2.2012-இல் பிற்பகல் 12 மணியளவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐ.நா தூதரத்திடம் ஒரு கண்டன மனு சமர்பிக்கப்படவுள்ளது.

2009-ல் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இராணுவம் கொடூரமாக மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில் சரணடைகிறோம் என்று ஐ.நாவிடம் அறிவித்து விட்டு வெளியேறியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Arumugam_Suaramஒட்டுமொத்தத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இந்த அதிநவீன காலத்தில், என்ன நடக்கிறது என்று தெரிந்தும் மௌனமாக வேடிக்கை பார்த்த ஐ.நாவின் செயல் வருந்தத்தக்கது மட்டுமல்ல அது கடுமையான கண்டனத்திற்குரியது என்கிறார் சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை போரின்போது தான் நடந்து கொண்டது பற்றிய ஓர் உள்விவகார ஆய்வு அறிக்கையை ஐ.நா ஆய்வுக் குழு வெளியிட்டது. சார்ல்ஸ் பெட்ரி அறிக்கை எனப்படும் இது, தமிழர் இனப்படுகொலையின்போது ஐ.நா நடந்து கொண்ட விதத்தில் உள்ள குறைபாடுகளை அது பட்டியலிட்டுள்ளது என்கிறார் கா. ஆறுமுகம்.

மேலும், அவ் அறிக்கை ஐ.நாவின் விதி 99-இன் கீழ் அதன் பொதுச் செயலாளர் தமிழர் இனப்படுகொலையை விசாரணை செய்ய சுயாதீனமான குழு அமைக்க வழி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் வழி ஐ.நா பொதுச் செயலாளராக இருக்கும் பான் கீ மூன் ஐ.நாவின் பாதுகாப்பு மன்றத்திற்கு தகுந்த பரிந்துரைகளை செய்யவே இந்த கண்டன மனு என்கிறார் இதன் ஏற்பட்டாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

வரும் புதன்கிழமை, தமிழின ஆர்வாலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டர்கள் அனைவரும் டாமன்சரா ஜலான் டுங்குனில் உள்ள ஐ.நா தூதரகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வரும்படி அழைக்கப்படுகின்றனர்.

Ban ki-Moon, Mahinda Rajapakse

TAGS: