பெக்கானில் கத்தியை வைத்திருந்த இளைஞர்கள் மாணவர்களை மருட்டினர்

studentsபெக்கானுக்கு அருகில் உள்ள பெல்டா சினி 4-யில் இன்று காலை அங்குள்ள மக்களுக்கு தாங்கள் கடிதங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது கத்திகளை வைத்திருந்த இளைஞர் கும்பல் ஒன்று தங்களை மிரட்டியதாக பல பல்கலைக்கழக மாணவர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து இளைஞர்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் கத்தியைக் காட்டி அங்கிருந்து வெளியேறுமாறு உரத்த குரலில் சொன்னதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“நாங்கள் கத்தியைப் பார்த்ததும் அங்கிருந்து போய் விடுவதாகச் சொன்னோம். ஒருவர் எங்களிடமிருந்த கடிதங்களைப் பறித்துக் கொண்டார்,” என மாணவர்களில் ஒருவரான சாபுவான் சம்சுதீன் தெரிவித்தார்.
அவர் மலேசியப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கல்லூரி மாணவர் ஆவார்.

நாங்கள் பின்னர் அந்த இடத்திலிருந்து வெளியேறி 500 மீட்டர் தொலைவில் இருந்த  பாதுகாவலருடைய இல்லத்துக்குச் சென்றோம்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.

பின்னர் அந்த மாணவர்கள் சினி போலீஸ் நிலையத்துக்குச் சென்று அந்தச் சம்பவம் மீது புகார் செய்தனர்.

பெல்டா சினி 4, சினி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது.

பெக்கானில் உள்ள காஞ்சோங், கம்போங் டத்தோ கெராமாட்டில் கடிதங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒருவர் தம்மைத் தாக்கியதாக நேற்று இன்னொரு மாணவர் போராளியும் கூறிக் கொண்டுள்ளார்.

 

TAGS: