“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்”
நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர் என்கிறார் அன்வார்
சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களாக தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான பல பிரச்னைகள் மீது மௌனம் சாதித்து வருகிறார்.
அடித்தட்டு மக்களுடன் முற்றிலும் தொடர்பு இல்லாத அல்லது ஏதுமறியாத மோசமான ஆலோசகர்கள் நஜிப்பை சுற்றிலும் இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த அறிக்கை சரியானதாகும்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி ஆகியோரிடம் ‘முடியாது’ எனச் சொல்லும் திடமான போக்கு நஜிப்பிடம் இல்லை. அண்மைய காலமாக தங்களது வார்த்தைகளினாலும் நடவடிக்கைகளினாலும் இந்த நாட்டில் இன ஐக்கியத்துக்கும் சமயச் சகிப்புத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அவர்களைக் ‘கட்டுப்படுத்தும்’ துணிச்சலும் அவருக்கு கிடையாது.
முக்கியமான பிரச்னைகளை எதிர்நோக்கும் போது அமைதியாக இருந்து விட்டு மக்களை ‘உபசரிப்பதில்’ மட்டும் மனத் திருப்தி அடையும் பிரதமர் ஒருவரை பெற்றிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
உங்கள் அடிச்சுவட்டில்: அம்னோ/பிஎன் -னும் அவற்றின் தலைமைத்துவமும் ஏன் ஊமையாக இருக்கின்றன என்பதில் இனிமேல் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.
தந்தையரிடமிருந்து மகன்களுக்கும் சேவகர்களிடமிருந்து சேவகர்களுக்கும் மாற்றி விடும் நெற்களஞ்சியம் தான் அம்னோ/பிஎன். அது புத்திசாலிகளைக் கவருவதற்கு ஒரிரு தவணைக் காலத்துக்காவது எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும்.
அது மக்கள் ஆதரவைப் பெற அதே பழைய இன, சமய வழிகளைப் பயன்படுத்துகின்றது. காலம் மாறி விட்டதை அது உணரவில்லை. மக்கள் விரக்தி அடைந்துள்ளதை அது அறியவில்லை.
டாக்: பிரதமர் நஜிப்பின் தலைமை ஆலோசகரான ரோஸ்மா மான்சோர் அவருக்கு தவறான யோசனைகளைச் சொல்லி வருகிறார் என அன்வார் கூறுகின்றாரா ?
ஸ்விபெண்டர்: நஜிப் பலவீனமான அரசியல்வாதி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தமது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் மதில் மேல் பூனையாகவே இருந்து வந்துள்ளார். இப்போது மோசமான ஆலோசகர்களையும் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு பேரழிவு தான் ஏற்படும்.
ஜேம்ஸ் பாண்ட 007: மகாதீரும் அம்னோ தலைவர்களும் நஜிப்பின் ரகசியங்களை அறிந்துள்ளனர். அதனால் அவர்களை எதிர்த்து போராட முடியாமல் தவிப்பது அவரது குற்றமல்ல.
ஸ்டார்ர்: Psy இசை நிகழ்ச்சியில் ‘நீங்கள் பிஎன் -னுக்குத் தயாரா ?’ என எழுதிக் கொடுக்கப்பட்ட வசனத்தை படித்தது போல மூன்று முறை கேள்வி எழுப்பினார். உடனடியாக அந்த வசனத்தை அவரால் மாற்ற முடியாது.
அது போன்றே பெரும்பாலான அரசாங்கக் கொள்கைகளும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
யார் அந்த அரசாங்கக் கொள்கைகளை தயாரிக்கின்றார்கள், நீங்கள் எண்ணுவதையே நானும் நினைக்கிறேன்.
அது நஜிப் நிர்வாகத்தின் பலவீனமான தலைமைத்துவத்தையே காட்டுகின்றது. அதன் விளைவாக பெரும்பாலான விஷயங்களில் அடிக்கடி முரண்படுகிறார்.
ஒஸ்: உண்மையில் நஜிப் ஆலோசகர்களும் அவர் போக வேண்டுமென விரும்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஆ கூ ஆ பே: அன்வார் நீங்கள் சொல்வது சரி. பினாங்கு மக்கள் விவேகமானவர்கள். வாக்குகளைவிவேகமாக செலுத்துவர். அரசியல் களத்தில் வெகுமதிகளை யார் கொடுத்தாலும் அவர்கள் அதற்கு மயங்கி விட மாட்டார்கள்.
பிளாக் பெரி: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். அதே வேளையில் அன்வார் மிகவும் புத்திசாலியாகி வருகிறார். இந்த நேரத்தில் மக்கள் கேட்க விரும்புவதையே அவர் பேசி வருகிறார்.