பிஎன் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை

musa1வரும் பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும்.

FCAS என்ற சபா சீனர் சங்க சம்மேளனம் ஒர் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதால் பார்வையாளர் தகுதியிலிருந்து அது அகற்றப்பட வேண்டும் என சபா பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது பற்றிக் கருத்துரைத்த இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவ்வாறு கூறினார்.

அந்த அரசு சாரா அமைப்பின் நியமனம் இசி விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“FCAS நியமனம் இன்னும் அமலுக்கு வரவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் முடியும் வரை விதிக்கப்படும் நிபந்தனைகள் அடிப்படையிலேயே அது நடைமுறைக்கு வரும்.”musa2

“இப்போதைக்கு அது மற்ற எந்த அரசு சாரா அமைப்பையும் போன்றது தான்,” என அவர் சொன்னார்.

சபாவிலும் லாபுவானிலும் 13வது பொதுத் தேர்தலுக்கான இந்த மாதத் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உள்நாட்டுப் பார்வையாளராக  நியமிக்கப்பட்ட மூன்று அரசு சாரா அமைப்புக்களில் FCAS-ம் ஒன்றாகும்.

ஆனால் அடுத்த நாள் முதலமைச்சர் மூசா அமான் தலைமைத்துவத்தில் இயங்கும் பிஎன் மாநில அரசாங்கத்துக்கு சீன சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என  FCAS இடைக்காலத் தலைவர் டிசி கோ கேட்டுக் கொள்ளும் செய்தியை நியூ சபா டைம்ஸ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து FCAS பார்வையாளர் தகுதியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என சபா பெர்சே கேட்டுக் கொண்டது.

 

TAGS: