“நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது”
Psy-யை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டது உண்மையே என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர்
மஹாஷித்லா: கொரிய பாப் நடன இசைக் கலைஞர் Psy பெரிய நட்சத்திரம் ஆவார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெரிய கூட்டம் கூடுவது இயல்பு.
அதனால் உள்நாட்டுப் போலீசார் அவருக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு கூட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். யாரோ ஒருவர் அல்லது ஒரு கும்பல் Psy-யைக் கொல்வதற்கு முயற்சி செய்கிறது என தங்களுக்கு தெளிவாக தகவல் கிடைத்திருந்தால் அந்த நிகழ்வு தொடருவதற்கு புக்கிட் அமான் அனுமதித்தது பொறுப்பற்ற செயலாகும்.
பிஎன் அவமானத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறது. தனக்கு ஆதரவாக அது போலீஸைப் பயன்படுத்தியுள்ளது.
முன்னாள் பேராக் வாசி: அவர்கள் உண்மையில் கதைகளை ஜோடிக்கின்றனர். அவர்கள் வெற்றிகரமாக Psy -யைப் பாதுகாத்திருந்தால் அவர்கள் அது குறித்து மௌனமான இருக்க வேண்டும். உண்மையில் அத்தகைய முயற்சிகள் ஏதும் இருந்தால் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் கொரிய உணவு விடுதியில் விருந்தில் Psy கலந்து கொண்டிருக்கவே மாட்டார்.
அவரைக் கொல்ல மலேசியர்கள் முயற்சி செய்தார்களா ? அவர்களுடைய நோக்கம் என்ன ?
எல்லா மலேசியர்களும் ஒரு விஷயத்தையே கேட்கின்றனர். 13வது பொதுத் தேர்தல் நெருங்கும் போது இசை நிகழ்ச்சிகள் போன்ற முக்கியமில்லாத விஷயங்கள் பற்றிக் கதைகளை ஜோடிக்க வேண்டாம்.
ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அது உணவைத் தரப் போவதில்லை. மாறாக நல்ல ‘ஆதரவு பெற்ற’ பணம் வாடகை விமானம் ஒன்றில் நாட்டிலிருந்து பறந்து விட்டது.
கேபிஇ: மலேசிய எதிர்த்தரப்புத் தலைவருடைய உயிருக்கு பல முறை மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது கற்களும் மற்ற பொருட்களும் வீசப்பட்டுள்ளன. ஆனால் அரச மலேசியப் போலீஸ் படையினர் அந்நிய பிரமுகர்களுடைய பாதுகாப்பு பற்றியே அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறது.
எஸ்ஆர்எம் மனிதர்: Psy-யைக் கொல்வதற்கு உண்மையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது- ஆகவே அந்நியக் கலைஞர்கள் அதனைக் கருத்தில் கொள்வது நல்லது. எதிர்காலத்தில் இந்த நாட்டில் நிகழ்ச்சிகளைப் படைக்க வரும் முன்னர் ஒரு முறைக்கு இரு முறை சிந்தியுங்கள்.
சாரிபசால்: பிஎன் அரசாங்கமும் போலீசும் பொய் சொல்லுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் நிராகரிப்பதை ஏற்றுக் கொள்வது பாவமல்ல. ஆனல் பொய் சொல்வது பாவம்.
அந்தக் குற்றச்சாட்டு நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா பாதுகாப்பான நாடு என போலீஸ் சொல்வதற்கு நேர்மாறாக அது அமைந்துள்ளது. அந்தக் கொலை முயற்சி பற்றி Psy விளக்குவது நல்லது.
பல இனம்: மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவும் பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபியும் அபத்தமான பொய்களைச் சொல்லி எங்கள் விவேகத்தை அவமானப்படுத்த வேண்டாம்.
அந்த இரு விஷயங்களும் உண்மை என்றால் பாதுகாப்பு இல்லாமல் Psy-யை மேடையில் நிகழ்ச்சி நடத்த ஏன் அனுமதித்தீர்கள் ? ஒரு பாடலுக்கு மட்டுமல்ல. அவர் பல பாடல்களுக்கு நடனமாடினார்.
பாதுகாப்பு இல்லாமல் ஏன் மேடைக்குச் செல்வதற்கு பிரதமரை ஏன் நீங்கள் அனுமதித்தீர்கள் ? நீங்கள் ஏமாற்ற விரும்பினால் அதனை புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். அந்த இரண்டு விஷயங்களுமே நாட்டுக்கு அவமானத்தைத் தருகின்றன.
வேட்டைக்காரன்: மூன்றாம் தர போலிவுட் திரைப்பட வசனத்தைப் போன்று அது அமைந்துள்ளது. நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.