செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது மலேசியாவுக்கு பொது உறவுப் பேரிடர்

xenapone‘பிலிப்பின்ஸில் தேடப்படும் மோசடிக்காரரை நாம் பாதுகாக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் இந்த நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கிறோம்’

15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலிய செனட்டர் திருப்பி அனுப்பப்பட்டார்

கலா: ஆஸ்திரேலிய செனட்டரான நிக் செனபோன் நாட்டின் எதிரியாக விளங்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவரா ? மலேசியாவில் சமூக இயக்கங்கள் மீது அனுதாபம் காட்டும் அந்த மனிதர் எப்படி பொது எதிரியாக முடியும் ?  செனபோன் ஒரு வேளை அம்னோ தலைமையில் இயங்கும் பிஎன் ஆட்சிக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் மலேசிய மக்களுடைய எதிரி அல்ல.

செனபோனை திருப்பி அனுப்பியதின் மூலம் அரசாங்கம் தீவகற்ப மலேசியாவில் 2008 தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஆதரித்த 51 விழுக்காடு வாக்காளர்களை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது.

இப்போது உண்மையில் நாட்டின் எதிரி யார் ?

ஜெஸி: அம்னோ வழி நடத்தும் அரசாங்கத்துக்கு மதி கெட்டு விட்டதையே அது காட்டுகின்றது. உள்துறை அமைச்சருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை என்பதையும் அது உணர்த்துகின்றது.

செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது நிச்சயம் ஆஸ்திரேலியாவில் மலேசிய அரசாங்கம் பற்றி மோசமான பிரச்சாரத்துக்கு வழி வகுத்து விடும். அது உண்மையில் மலேசியாவுக்கு பொது உறவுப் பேரிடர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் எதனையோ மறைக்க முயலுவதையே அது உணர்த்துகின்றது.

ஸ்டார்ர்: செனபோன் நாட்டின் எதிரி என யார் முடிவு செய்வது ? பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அம்னோ/பிஎன் அரசாங்கம் தன்மூப்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்த செனட்டர் நாட்டின் எதிரி அல்ல. மலேசியாவில் மோசமடைந்து வரும் ஜனநாயகம் குறித்து அக்கறை கொண்டுள்ள ஜனநாயகப் போராட்டவாதி ஆவார்.

அவர் திருப்பி அனுப்பப்பட்டது மலேசியாவை உலக நாடுகள் கேலி செய்வதற்கு வழி வகுத்து விடும்.

அடையாளம் இல்லாதவன்_40dc: பல மில்லியன் டாலர் மோசடிக்காக பிலிப்பின்ஸில் தேடப்படும் ஒருவருக்கு நாம் பாதுகாப்பு அளிக்கிறோம். ஆனால் ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் இந்த நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கிறோம்.

ஸ்விபெண்டர்: அம்னோ ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்திற்கு மூளை பிரண்டு விட்டது. மலேசியராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அதற்கு நட்புறவாக இல்லாதவர்கள் ‘நாட்டின் எதிரி’ என வகைப்படுத்தப்படுகின்றனர்.

விஜய்47: இனிமேல் மலேசியா அனைத்துலகச் செய்திகளில் இடம் பெறப் போகிறது. சிங்கப்பூர், இந்தோனிசியா, இப்போது தாய்லாந்து, பிலிப்பின்ஸ், அடுத்து நாம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியுள்ளோம். உண்மையில் அம்னோ இந்த நாட்டை வெளியுலகத்திலிருந்து ஒதுக்கி வைக்க முயலுகிறது.

சூப்பர்செசன்: செனபோன் உங்களுக்காக வருந்துகிறேன். நீங்கள் மட்டும் முஸ்லிம் கள்ளக் குடியேறியாக இருந்தால் உங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு  குடியுரிமை கூடக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

TAGS: