ஆகவே செனபோனை திருப்பி அனுப்புவது என யார் முடிவு செய்தார்கள் ?

xenaponeஅவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலிய அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். ஏனெனில் அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை”

பிரதமர் அவர்களே உண்மையில் அதிகாரம் உங்கள் கையில் தானா ?

தோலு: ஒர் அந்நிய நாட்டுக் குடிமகன் நமது அரசாங்கத்தின் போக்கை குறை கூறுவதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆட்சி சகித்துக் கொள்ள முடியாதா ?

அந்த நிலையில் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு பேச்சுச் சுதந்திரமுள்ள உண்மையான ஜனநாயக நாடாக மலேசியாவை மாற்றும் என நாம் எப்படி அதனை நம்ப முடியும் ?

ஸ்டார்ர்: நிக் செனபோன் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது நமது அனைத்துலகத் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு நாட்டில் சுதந்திரமான தேர்தல் குறித்த சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.

முடிவுகளை எடுக்கின்றவர்கள் தங்களுடைய உடனடித் தேவைகள் அடிப்படையில் முடிவு செய்வதையே அது உணர்த்துகின்றது.

செனபோன், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒர் உறுப்பினர் மட்டுமல்ல. ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரங்களில் அவர் பெரிதும் மதிக்கப்படுகின்றவரும் ஆவார்.

அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலிய அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். ஏனெனில் அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை.

என்ன பெயர்: செனபோனை தடுத்து வைத்து திருப்பி அனுப்பும் உத்தரவு பிரதமர் அலுவலகத்திலிருந்து

வரவில்லை என நஜிப் அறிக்கை விட வேண்டும்.

ஏனெனில் அது உங்கள் அலுவலகத்திலிருந்து வந்ததாக வதந்திகள் உலவுகின்றன. அத்துடன் அந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்ததாக குடிநுழைவு அதிகாரியும் சொல்லியிருக்கிறார். ஆகவே எந்த அளவுக்கு அது மேலிடம் ?

அதனை விரைவாகச் செய்யுங்கள். ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எல்லாப் பக்கத்திலும் கூச்சல் போடுகின்றன. ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்டும் உங்கள் விளக்கத்தைக் கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான நமது நல்ல உறவுகள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மௌனம் காக்க, காக்க மலேசிய ஆஸ்திரேலிய உறவுகள் நலிவடையும்.

முட்டாள் அல்ல: பிரதமர் அமைதியாக இருக்கிறார். செனபோனை திருப்பி அனுப்பியது அரசியல் முடிவல்ல என உள்துறை அமைச்சர் சொல்கிறார்.

பிஎன் அரசாங்கம் மலேசியர்களை முட்டாள்கள் என எண்ணுகின்றது.

பிஎன் அரசாங்கம் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அது ஜனநாயகத்துக்குப் புறம்பாக செயல்படுகின்றது.

அதனால் அதனை வரும் பொதுத் தேர்தலில் அகற்றப்பட வேண்டும். இந்த ஊழல் மலிந்த அரசாங்கத்தில் மலேசியாவுக்கு எதிர்காலமே இல்லை.

ரென் அலி: உண்மையில் பிஎன் தான் “நாட்டின் உண்மையான எதிரி”. அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் போதும் என்ற எண்ணத்துடன் பிஎன் இயங்கக் கூடாது. உங்களை மறு ஆய்வு செய்து கொண்டு நாட்டு நலனுக்கு முதலிடம் கொடுங்கள்.

கேஜே ஜான்: அது அரசு அதிகாரிகள் எடுத்த முடிவு அல்ல. அவர்கள் தொழில் ரீதியாக முடிவு செய்யும் ஆற்றலை எப்போதோ இழந்து விட்டார்கள்.

அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுடைய உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக பின்பற்றும் முட்டாள்கள். சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச ஆணைய  விசாரணையில் அது தெளிவாகியுள்ளது. ந

மது அரசாங்க அமைப்புக்களுடைய ஆற்றலை மேம்படுத்தி உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மஹாடெட்: நஜிப் அச்சத்தில் வாழ்கிறார். அச்சமடைந்துள்ள மனிதர் மிகவும் ஆபத்தான மனிதர். அவர் தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்.

 

TAGS: