’13வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் பிஎன் -னிடம் வழக்கமான முன்னணி நிலை இல்லை’

najibகடந்த பொதுத் தேர்தல்களில் பிஎன் நல்ல வெற்றியை அடைவதற்கு பங்காற்றியுள்ள ‘முன்னணி நிலை’ இப்போது அந்தக் கூட்டணியிடம் இல்லை.

2008 தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் பெறாததால் அது தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதே அதற்குக் காரணமாகும்.

இவ்வாறு ஜனநாயகம், தேர்தல்களுக்கான மலாயாப் பல்கலைக்கழக மய்யத்தின் இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான் கூறுகிறார்.

திடீர் தேர்தல்களை நடத்தி எதிர்க்கட்சிகளை பிஎன் வியப்பில் ஆழ்த்த முடியாமல் போனது, காணாமல் போன இன்னொரு ‘முன்னணி’ நிலை ஆகும். ஏனெனில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீண்ட காலத்துக்கு 13வது பொதுத் தேர்தலைத் தாமதப்படுத்தி விட்டதாகும் என அவர் குறிப்பிட்டார்.najib1

“1999ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. அப்போது கெஅடிலான் (இப்போது பிகேஆர்) உதயமாகி ஆறு மாதங்களே முடிந்திருந்தன,” என மலாயாப் பல்கலைக்கழகத்தில் தேர்தல் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் அவர் கூறினார்.

“அப்போது பருவ மழைக் காலமாகவும் இருந்தது. திடீர் தேர்தல் காரணமாக பல புதிய வாக்காளர்களுடைய பெயர்களை தேர்தல் ஆணையம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்க முடியவில்லை. ஆனால் இப்போது அது பிரச்னை அல்ல. காரணம் எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.”

ஆதரவு மாறிக் கொண்டே இருக்கிறது

தேர்தல் முடிவுகளில் நேர் மாற்றங்கள் இருப்பதை காண முடிவதாகவும் முகமட் ரெட்சுவான் குறிப்பிட்டார். ஒரு பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கான ஆதரவு சரிந்தால் அடுத்த தேர்தலில் அந்த ஆதரவு மீMடும் திரும்புவதைக் காண முடிகிறது என்றார் அவர்.

“ஆனால் இந்த முறை தேர்தல் தொகுதி எல்லைகளை மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை பிஎன் கூட்டணி செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால் தொகுதி எல்லைகள் கடந்த பொதுத் தேர்தலில் இருந்ததைப் போன்று தான்  இருக்கும்,” என்றார்  முகமட் ரெட்சுவான்.

“பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவது சிரமம் என்பதே அதன் அர்த்தமாகும்,”என்றார் அவர்.

தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்வதின் மூலம் திருத்துவதின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட முகமட் ரெட்சுவான், 2004 பொதுத் தேர்தலில் பிஎன் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 63.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் 90.41 விழுக்காடு இடங்களை அது பிடித்தது என்றார்.

“ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் அதனைச் செய்ய முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜுன் 28க்குள் மலேசியா 13வது பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்தத் தேதியை இன்னும் ரகசியமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

 

TAGS: